ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் லக்னோ அணியின் வீரர் அமித் மிஸ்ரா அற்புதமாக கேட்ச் பிடித்து மிரட்டினார். யாஷ் தாகூர் வீசிய ஆட்டத்தின் 17.2வது ஓவரை, ஹைதராபாத் வீரர் திரிபாதி பவுண்டரி விரட்ட அப்பர் கட் அடித்தார்.
அப்போது அங்கு பீல்டிங்கில் இருந்த அமித் மிஸ்ரா வேகமாக பாய்ந்து பந்தை பிடித்தார். 40 வயதிலும் மிஸ்ரா அசத்தலாக இந்த கேட்சை பிடித்ததால். இதனை கண்டு லக்னோ வீரர்கள் மிரண்டு போய் அவரை பாராட்டினர். இப்போட்டியில் மிஸ்ரா 2 விக்கெட்டுகளும் எடுத்து கலக்கினார்.
unknown nodeஇது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், வீடியோவை பார்த்த பலரும் 40 வயதிலும் இப்படி ஒரு கேட்ச்-ஆ அருமை..அருமை என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும் வரும் 10-ஆம் தேதி லக்னோ அணி அடுத்ததாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோதவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.