நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 49 பந்துகளில் 103 ரன்கள் குவித்து ஐபிஎல்லில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
இந்த போட்டியில் அவர் அடித்த சிக்ஸ்ர்கள் அனைத்துமே மிகவும் அருமையாக இருந்தது என்று கூறலாம். குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு எதிராக அவர் அடித்த ஒரு சிக்ஸர் அனைவரையுமே மிரள வைத்தது. யாருமே இதுபோல ஒரு ஷாட் அவர் அடிப்பார் என எதிர்பார்க்காத நிலையில் பேட்டை சுழற்றி பந்தை சிக்ஸர் அடித்து பறக்கவிட்டார்.
unknown nodeஅப்போது இதனை பார்த்த சச்சின் டெண்டுல்கர் சற்று ஆச்சரியமாகி “எப்படி இது” என்பது போல செய்கை ஒன்றையும் கொடுத்தார். அதற்கான வீடியோக்கள் கூட இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து, சச்சின் சூர்யகுமார் யாதவ்வை பாராட்டி டிவிட் ஒன்றை செய்துள்ளார்.
unknown nodeமேலும், நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 218 ரன்கள் குவித்தது. அடுத்ததாக 219 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 191 ரன்கள் மட்டுமே எடுத்து. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
