பரபரப்பு..நிதிஷ் ராணாவின் மனைவி காரை தாக்கிய 2 இளைஞர்கள்…புகார் அளித்தும் கண்டுகொள்ளாத போலீசார்.!!

nitish rana and wife

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவின் மனைவி சாச்சி மர்வா, சமீபத்தில் வேலையை முடித்துவிட்டு காரில் தன்னுடைய வீட்டுக்குத் திரும்பும் போது இரண்டு இளைஞர்கள்  ‘பின்தொடர்ந்து’ தாக்கிய கொடூரமான சம்பவத்தை எதிர்கொண்டார்.


இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீட்டு நடந்த சம்பவத்தை சாச்சி மர்வா விளக்கினார். இந்த விஷயத்தை டெல்லி போலீசில் சொல்லி புகார் செய்ய முயன்றதாகவும், ஆனால் அதிகாரிகளும் எந்த உதவியும் செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புகார்  அளிக்கப்பட்டு இருப்பினும், அவர் ஏற்கனவே பத்திரமாக வீட்டை அடைந்துவிட்டதால், அதை விட்டுவிட வேண்டும் என்றும், அடுத்த முறை வாகனத்தின் எண்ணைக் குறிப்பிட வேண்டும் என்றும் அதிகாரிகள் அவரிடம் கூறியுள்ளார்கள். இது குறித்து ராணாவின் மனைவி சாச்சி மர்வா இன்ஸ்டாவில் கூறியதாவது ” டெல்லியில் ஒரு சாதாரண நாள், நான் வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில்! இவர்கள் என் காரை தற்செயலாகத் தாக்கத் தொடங்கினர். எந்த காரணமும் இல்லாமல், பின்தொடர்ந்து துரத்தினார்கள்.

நான் புகார் செய்தபோது போலீசார் என்னிடம் தொலைபேசியில் சொன்னார்கள், ‘இப்போது நீங்கள் பத்திரமாக வீட்டை அடைந்ததும் அதை விடுங்கள். அடுத்த முறை, நம்பர் நோட் செய்து என்னை தொடர்பு கொள்ளுங்கள் என கூறினார்” என  சாச்சி மர்வா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் குறிப்பிட்டுள்ளார். காரணமே இல்லாமல் திடீரென நிதிஷ் ராணாவின் மனைவியின் காரை இரண்டு நபர்கள் பின்தொடர்ந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்