ஆக்சிஜன் செறிவூட்டி கருவியை நன்கொடையாக வழங்கினார் ஷிகர் தவான்..!!

As the oxygen shortage continues to increase, Shikhar Dhawan has donated oxygen concentrators to the Gurugram police.

ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையில், ஷிகர் தவான் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை குருகிராம் காவல்துறையினரிடம் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் உள்ளிட்ட மருத்துவ உதவிகள் கிடைக்காமல் மக்கள் அவதி பட்டு வருகிறார்கள்.

இதற்காக கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள் அந்த வகையில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை குருகிராம் காவல்துறையினரிடம் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இதற்கு முன்பு ஷிகர் தவான் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டபோது ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கினார். அதுமட்டுமின்றி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஆட்ட நாயகன் விருதுகள் உள்ளிட்டதன் மூலம் கிடைத்த தொகைகளையும் கொரோனா நிவாரணத்துக்கு நன்கொடையாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.