SRHvsDC : அபிஷேக் சர்மா அதிரடி! டெல்லியை சாய்த்த ஹைதராபாத்!

டெல்லி கேபிடல்ஸ் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, நடப்பு தொடரில் 4வது வெற்றியை பெற்றது SRH அணி

Hero Image

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆனால் அது அவர்களுக்கு சாதகமாக அமையவில்லை.

தொடக்கத்தில் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்தனர். இருவரும் சேர்ந்து 53 பந்துகளில் 97 ரன்கள் சேர்த்து அணியை வலுவான நிலையில் கொண்டு சென்றனர். பின்னர் அணித்தலைவர் இஷான் கிஷன் இணைந்ததும் வேகம் மேலும் அதிகரித்துள்ளது.

அபிஷேக் சர்மா அசத்தலான ஆட்டம் காட்டி 135* ரன்கள் குவித்து போட்டியின் திருப்புமுனையாக மாறினார். இறுதியில் ஹென்ரிச் கிளாசென் வெறும் 13 பந்துகளில் 37 ரன்கள் குவித்த அதிரடி காரணமாக ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 242/2 என்ற பெரிய இலக்கை பதிவு செய்தது.

அடுத்ததாக, பதிலடி ஆடிய டெல்லி அணிக்கு ஆரம்பத்தில் தடுமாற்றம் ஏற்பட்டாலும், KL ராகுல் மற்றும் நிதிஷ் ராணா இணைந்து அணியை மீண்டும் போட்டிக்குள் கொண்டு வர முயன்றனர். இருவரும் சேர்ந்து நல்ல கூட்டணியை அமைத்தபோதிலும், முக்கிய தருணத்தில் விக்கெட்டுகள் சரிந்து டெல்லி அணியின் நம்பிக்கை குறைந்தது.

பின்னர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் சமீர் ரிஸ்வி சிறிய எதிர்ப்பை காட்டினாலும், இலக்கு மிகப்பெரியது என்பதால் அவர்களால் வெற்றியை அடைய முடியவில்லை. பந்துவீச்சில் எஷான் மலிங்கா சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லி அணியை கட்டுப்படுத்தினார். இதன் மூலம் டெல்லி அணி 20 ஓவர்களில் 195/9 என்ற கணக்கில் சுருண்டது. மொத்தத்தில் அபிஷேக் சர்மாவின் அதிரடி சதமும், மாலிங்காவின் சிறந்த பந்துவீச்சும் சேர்ந்து ஹைதராபாத் அணிக்கு முழுமையான வெற்றியை உறுதி செய்தது.