தென்னாபிரிக்கா பந்து வீச்சில் திணறல்! 204 ரன்கள் இலக்காக வைத்த இலங்கை!

இன்றைய போட்டியில் இலங்கை , தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி  செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில்

இன்றைய போட்டியில் இலங்கை , தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி  செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

unknown node

முதலில் இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக  குசல் பெரேரா, திமுத் கருணாரத்ன இருவரும் களமிறங்கினர்.ஆட்டத்தின் முதல் ஓவரில் முதல் பந்திலே ரபாடா வீசிய பந்தில் திமுத் கருணாரத்ன விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் அவிஷ்கா பெர்னாண்டோ களமிறங்கினர்.பெர்னாண்டோ ,   குசல் பெரேரா இருவரின் கூட்டணியில் ரன்கள் சற்று உயர்த்தினார். சிறப்பாக விளையாடிய பெர்னாண்டோ பத்தாவது ஓவரில் 30 ரன்களுடன் வெளியேறினர். தென்னாபிரிக்கா அணி பந்து வீச்சில் தடுமாறி விளையாடிய குசல் பெரேரா 30 ரன்னுடன்  அவுட் ஆனார்.

unknown node

அடுத்ததாக களமிறங்கிய குசல் மெண்டிஸ் 23 ரன் எடுத்து வெளியேற பிறகு களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்.இறுதியாக இலங்கை  அணி 49.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 203 ரன்கள் எடுத்தது.தென்னாபிரிக்கா அணி பந்து வீச்சில் டுவைன் பிரிட்டோரியஸ் ,  கிறிஸ் மோரிஸ்  தலா 3 விக்கெட்டையும் ,  ரபாடா   2 விக்கெட்டையும் வீழ்த்தினர். 204 ரன்கள் இலக்குடன் தென்னாபிரிக்கா அணி களமிறங்க உள்ளது.