டி20 பயிற்சி போட்டி : இந்தியா-வங்கதேசம் நியூயோர்க்கில் இன்று பலப்பரீட்சை !

டி20I : இந்திய அணி தனது லீக் போட்டியில் வரும் ஜூன்-5ம் தேதி அயர்லாந்து அணியுடன் மோதவிருக்கும் நிலையில் இந்திய அணிக்கு பயிற்சி போட்டியானது இன்றைய நாளில் நடைபெற உள்ளது. இதில் வங்கதேச அணியை எதிர்த்து இந்திய அணி இரவு 8 மணிக்கு விளையாட இருக்கிறது.
இந்த போட்டியானது நியூயோர்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. வங்கதேச அணி ஏற்கனேவே, அமெரிக்க அணியுடன் பயிற்சி போட்டியில் மோதவிருந்த நிலையில் மோசமான வானிலையின் காரணமாக அந்த போட்டி நடைபெறாமல் முடிவடைந்தது.
இந்த பயிற்சி போட்டியில் 2 அணிகளிலும் இடம் பெற்றுள்ள 15 வீரர்களும் கலந்து கொண்டு விளையாடுவார்கள். இதன் மூலம் புதிய ஆடுகளத்தில் (பிட்ச்) எப்படி பந்து வீச வேண்டும் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்று விளையாடும் 15 வீரர்களும் கற்று கொள்வார்கள்.
மேலும். லீக் போட்டிகளில் சரியான 11 வீரர்களை கொண்ட அணிகளை அமைக்கவும் இந்த பயிற்சி போட்டியானது உதவியாக இருக்கும். ரிசர்வ் வீரர்களாக இருப்பவர்கள், 15 வீரர்கள் இருக்கும் அணியில் இடம்பெற்றால் மட்டுமே இந்த பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி 15 வீரர்கள்
ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் , யுஸ்வேந்திர சாஹல்.
வங்காளதேச அணி 15 வீரர்கள்
லிட்டன் தாஸ், சௌமியா சர்க்கார், சாண்டோ (கேப்டன்), தவ்ஹித் ஹிரிடோய், ஷகிப் அல் ஹசன், மஹ்முதுல்லா, ஜேக்கர் அலி (விக்கெட் கீப்பர்), மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அகமது (துணை கேப்டன்), முஸ்தாபிஸுர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம், டான்சிம்ஸ் இஸ்லாம், ஹசன் சாகிப், தன்வீர் இஸ்லாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025