டி-20 உலகக்கோப்பையில் இந்தியா-வங்கதேசம் ஆட்டத்தில் 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர்-12 போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகிறது. டாஸ் வென்று வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ராகுல், கோலி மற்றும் சூரியகுமார் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணியில் அதிகபட்சமாக ராகுல் 50 ரன்களும், சூரியகுமார் 30 ரன்களும், மற்றும் விராட் கோலி 64 ரன்களும் குவித்தனர்.
20 ஓவர்கள் முடிவில் இந்தியா 6 விக்கெட்களை இழந்து 184 ரன்கள் எடுத்துள்ளது. வங்கதேச அணி தரப்பில் ஹசன் மஹ்மூத் 3 விக்கெட்களும், ஷாகிப் அல் ஹசன் 2 விக்கெட்களும் எடுத்தனர்.