#T20 World Cup 2022: அயர்லாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி அதிரடி ரன்கள் குவிப்பு.!
டி-20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா-அயர்லாந்து இடையேயான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 179 ரன்கள் குவிப்பு.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பையில் இன்றைய சூப்பர்-12 போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்று அயர்லாந்து முதலில் பந்து வீசப்போவதாக அறிவித்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக கேப்டன் பின்ச் 63 ரன்களும், ஸ்டோனிஸ் 35 ரன்களும் குவித்துள்ளனர். அயர்லாந்து அணி தரப்பில் பேரி மெக்கார்த்தி 3 விக்கெட்களும், ஜோசுவா லிட்டில் 2 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளனர்.