டி-20 உலகக்கோப்பை தொடரின் 11ஆவது போட்டியில், 9 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வெற்றி.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் 11 ஆவது தகுதிச்சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதியது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிராண்டன் கிங் 62 ரன்கள் குவித்திருந்தார். அயர்லாந்து தரப்பில் கரேத் டெலானி 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.
147 ரன்கள் வெற்றி இலக்கை விரட்டிய அயர்லாந்து அணி அதிரடியாக விளையாடி 17.3 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய பால் ஸ்டிர்லிங் 66 ரன்களும், லோர்கன் டக்கர் 45 ரன்களும் குவித்தனர்.
இதனால் அயர்லாந்து அணி விக்கெட் 9 வித்தியாசத்தில் வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸ் அணியை உலககோப்பையிலிருந்து வெளியேற்றியது. குரூப் Bயில் அயர்லாந்து அணி சூப்பர்-12க்கு தகுதி பெற்றுள்ளது.