ஸ்காட்லாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 109 ரன்கள் எடுத்தது.
ஐசிசி T20 உலகக் கோப்பை தொடரின் இன்றை தினத்தில் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. 2-வது போட்டியில் நமீபியா அணியும், ஸ்காட்லாந்து அணியும் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
அதன்படி ஸ்காட்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜார்ஜ் முன்சி, மேத்யூ கிராஸ் களமிறங்கினர். இதில் ரூபனின் முதல் பந்தில் முன்சி, 3ஆவது பந்தில் கலம் மேக்லியோட், 4 ஆவது பந்தில் ரிச்சி பெரிங்டன் விக்கெட்டை இழந்தனர். 10 ஓவர் முடிவில் ஸ்காட்லாந்த்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்தது. பின்னர் நமீபியாவின் அசத்தலான பந்துவீச்சால் ஸ்காட்லாந்த்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 109 ரன்கள் எடுத்தது.
இதில் நமீபியா அணியின் ஜான் ஃப்ரைலின்க் (2), ரூபன் ட்ரம்பெல்மேன்(3), ஜேஜே ஸ்மிட்(1), டேவிட் வைஸ்(2) விக்கெட்டை பறித்தனர்.