CSK வெற்றி.! சூழ்நிலைக்கு ஏற்ப திட்டத்துடன் களமிறங்கும் தோனி.! முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்.!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tamilnadu CM MK Stalin wish MS Dhoni

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நேற்றைய ஐபிஎல் போட்டி இறுதி ஆட்டத்தில் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. வெற்றி பெற்ற சென்னை அணிக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் சென்னை அணிக்கு தனது வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். அதில், ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்றவாறு சிறந்த திட்டத்துடன் களமிறங்கி 5வது ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை அணி கேப்டன் தோனிக்கும் மஞ்சள் படைக்கும் நன்றி எனவும், கடினமான சூழல்களை திறமையாக எதிர்கொண்ட ஜடேஜா CSK க்கு ஒரு வரலாற்று வெற்றியை உறுதிப்படுத்தினார். என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

unknown node