ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு 2-வது ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது.
முதலில் பேட் செய்த இந்திய அணி 340 ரன்கள் அடித்துள்ளது.
ஆஸ்திரேலியா அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது.குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
இதனையடுத்து முதலில் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா-ஷிகர் தவான் களமிறங்கினார்கள். ரோகித் அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 42 ரன்களில் வெளியேறினார்.இதன் பின்பு தவானுடன் கோலி ஜோடி சேர்ந்தார்.இந்த ஜோடி சற்று நிலைத்து நின்று ஆடியது.இந்த சமயத்தில் சதம் அடிக்க வேண்டிய நிலையில் தவான் 96 ரன்களில் வெளியேறினார்.மறுபுறம் கோலி தனது அரை சதத்தை ஷிகர் நிறைவு செய்தார்.ஆனால் கோலியும் 78 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.இதனைத்தொடர்ந்து ஸ்ரேயாஸ் 7,பாண்டே 2 ரன்களிலும் வெளியேறினார்கள்.ஆனால் ராகுல் மட்டும் இறுதியாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.ராகுல் அதிரடியாக விளையாடி 80 ரன்கள் விளாசினார்.
இறுதியாக இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 340 ரன்கள் எடுத்தது.ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் சம்பா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.இதனால் 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலகுடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.இந்த போட்டியில் வென்றால் மட்டுமே இந்திய அணி தொடரை சமன் செய்ய முடியும் .எனவே இந்த போட்டியை வென்று இந்திய அணி தொடரை சமன் செய்யும் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.