ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த "தல" தோனி.. சின்ன தல வாழ்த்து!

ஐ.பி.எல்.கிரிக்கெட் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை தல தோனி பெற்றார். அவருக்கு சின்ன தல ரெய்னா வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல்.கிரிக்கெட் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை தல தோனி பெற்றார். அவருக்கு சின்ன தல ரெய்னா வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

13 ஆம் ஐபிஎல் தொடர் அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டி, துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்தநிலையில், இந்த போட்டியில் விளையாடி வரும் சென்னை அணியின் கேப்டன தல தோனி, ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் யாரும் படைக்காத சாதனையை செய்துள்ளார்.

அந்தவகையில், ஐ.பி.எல்.கிரிக்கெட் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.இன்றைய போட்டியுடன் சேர்த்து தோனி, மொத்தம் 194 போட்டிகள் விளையாடியுள்ளார். அவரைதொடர்ந்து ரெய்னா 193 போட்டிகளிலும், ரோஹித் 192 போட்டிகளிலும், தினேஷ் கார்த்திக் 185 ரன்கள் அடித்துள்ளார்.

அவருக்கு சென்னை அணியின் சின்ன தல ரெய்னா, தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

unknown node