அணியின் வெற்றிக்கு அதுதான் மிகவும் அவசியம்...ருத்துராஜை புகழ்ந்த கேப்டன் தோனி.!

ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டி நேற்று நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும்

ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டி நேற்று நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது.  இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி அதிரடியாக விளையாடியது என்றே கூறலாம்.

குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர் ருத்ராஜ் கெய்க்வாட் அட்டகாசமாக விளையாடி 92 ரன்கள் குவித்தார்.  அவர் அடித்த அந்த ரன் காரணமாக தான் சென்னை அணி 178 எடுத்து.  அவர் சதம் அடிக்கவில்லை என்ற சோகம் ரசிகர்களுக்கு ஒரு பக்கம் இருந்தாலும், அவரை கேப்டன் தோனி புகழ்ந்து பேசியுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போட்டி முடிந்த பிறகு பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி “ருத்துராஜ் மிக அருமையாக விளையாடினார். வருகிற பந்தை கவனித்து எந்த மிகவும் அருமையாக விளையாடுகிறார். எந்த இடத்தில் அடிக்க வேண்டும் என்பது அவருக்கு தெரிந்துள்ளது. மிகச் சிறப்பாக அடிக்கிறார். அவர் பேட்டிங் செய்வதை பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது.

இளம் வீரர்கள் இவ்வாறு தானாக முன்வந்து சிறப்பாக விளையாடவேண்டியது  அணியின் வெற்றிக்கு மிகவும்  அவசியமான ஒன்று.  நாங்கள் அனைவரும் இன்னும் சிறப்பாக பேட்டிங் செய்திருக்கலாம்” என தோனி கூறியுள்ளார். மேலும் நேற்று நடந்த இந்த போட்டியில் குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.