டெஸ்ட் கிரிக்கெட் : 181 ரன்களுக்கு டிக்ளேர் செய்த இந்தியா.! வெற்றியை துரத்தி பிடிக்க போராடும் வெஸ்ட் இண்டீஸ்.!

வெஸ்ட் இண்டீசுக்குஎதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 181 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது இந்திய அணி.

INDvWI Test cricket 4th Day

வெஸ்ட் இண்டீசுக்குஎதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 181 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது இந்திய அணி.

இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டி,  மூன்று ஒரு நாள் போட்டி, ஐந்து டி20 போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி ஏற்கனவே முதல் டெஸ்ட் முடிந்து அதில் இன்னிங்ஸ் வெற்றியை பெற்றிருந்தது இந்தியா. இதனை தொடர்ந்து இரண்டாவது ஆட்டமும் இன்று இரவு முடிய உள்ளது.

இதில் முதலில் முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி 10 விக்கெட் இழப்புக்கு 438 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக விராட் கோலி 121 ரன்கள் எடுத்து இருந்தார். இதனை தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த முதல் இன்னிசை சற்று தடுமாறி பத்து விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக கேப்டன் பிரத்ஒயிட் 75 ரன்கள் எடுத்திருந்தார்.

நேற்று இரண்டாவது இன்னிசை இந்திய அணி தொடங்குது அதில் இந்திய தொடக்க அணி வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் டி20 ஆட்டம் போல் விறுவிறுப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டை ஆட தொடங்கினர். இதில் தொடக்க ஆட்டக்காரர் ஜோடி விரைவாக 50 ரன்கள் கடந்து சாதனை படைத்ததனர். இதனை தொடர்ந்து இரண்டு விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் இருக்கும் நிலையில் டிக்ளர் செய்தது இந்திய அணிகேப்டன் ரோஹித் சர்மா 57 ரன்களும், ஜெய்ஸ்வால் 38 ரண்களும் அடித்து அவுட் ஆகினர். சுப்மன் கில் மற்றும் இசான் கிசான் ஆகியோர் 29 மற்றும் 52 ரன்கள் எடுத்திருந்தனர்.

365 ரன்கள் எடுத்திருந்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று நான்காவது நாள் முடிவு வரை இரண்டு விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்திருந்தது. இன்று கடைசி நாளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற 289 ரன்கள் தேவைப்படும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று  டெஸ்ட் தொடரை கைப்பற்ற இந்திய அணி முயற்சி செய்து வருகிறது.