மும்பை :நகரில் நடைபெற்ற 27-வது CEAT கிரிக்கெட் ரேட்டிங் விருது விழாவில், இந்திய அணியின் ஸ்டார் பேட்ஸ்மேன் ரோஹித் ஷர்மா, தனது சிரிப்பை அடக்க முடியாமல் இருந்தார். அங்கு ஒரு மிமிக்ரி கலைஞர், முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ். தோனியை (MS Dhoni) அழகாகப் பின்பற்றி அவரை போலவே பேசிக்கொண்டிருந்த நிலையில், ரோஹித் உரக்க சிரித்துக்கொண்டே இருந்தார். அவரது மனைவி ரிதிகா சஜ்தே (Ritika Sajdeh) அருகில் உட்கார்ந்திருந்தார், அவரும் சிரித்தபடி தலையை ஆட்டி, ரோஹித்தை பார்த்துக்கொண்டிருந்தார்.
நிகழ்ச்சியில் அன்று இரவு பல கிரிக்கெட் பிரபலங்களின் மிமிக்ரி நடந்தாலும், தோனியை போல அவர் மிமிக்கிரி செய்தது அது மிகவும் கவனத்தை ஈர்த்தது. இந்த விழாவில் ரோஹித், 2023 ODI உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு இந்திய அணியின் அற்புதமான திரும்பி வெற்றியைப் பற்றி பேசினார்.
2024 T20 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராஃபி ஆகியவற்றில் தொடர்ச்சியான ICC வெற்றிகளுக்கு, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் (Rahul Dravid) மற்றும் அணியின் ஒட்டுமொத்த மனநிலையை (mindset) பாராட்டினார். “அந்த அணியை நான் ரொம்ப விரும்புகிறேன். அவர்களுடன் விளையாடினது அருமையான பயணம். இது ஒரு வருஷம் அல்லது ரெண்டு வருஷங்களின் உழைப்பு இல்லை. பல ஆண்டுகளின் உழைப்பு. அந்தக் கோப்பையை வெல்ல அருகில் வந்தும், கடந்து போக முடியவில்லை. அப்போ அனைவரும் ‘ஏதோ வித்தியாசமானது செய்ய வேண்டும்’ என்று முடிவு செய்தோம்” என்று அவர் கூறினார்.
மேலும், சமீபத்தில் BCCI, அடுத்த ஆஸ்திரேலியா சுற்றுக்கு முன் சுப்மன் கில் (Shubman Gill) ஐ ODI கேப்டனாக அறிவித்தது. வைஸ்-கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer). ரோஹித் இன்னும் அணியில் இருக்கிறார், விராட் (Virat Kohli) உடன். விழாவில் ரோஹித் மிகவும் ஃபிட் மற்றும் லீனராகத் தெரிந்தார், இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், ஆஸ்திரேலியா சுற்றுக்கு தயாராக இருப்பதற்கு ரசிகர்கள் பாராட்டினர். “ஆஸ்திரேலியாவுக்கு எதிரா விளையாட ரொம்ப விரும்புகிறேன். அங்க போக ரொம்ப விரும்புகிறேன். அங்க மக்கள் கிரிக்கெட்டை ரொம்ப விரும்புகிறார்கள்” என்று அவர் சேர்த்தார்.
unknown node