இணையத்தை கலக்கும் தல தோனி – வைரலாகும் புகைப்படம் ...!

The photo of the new look of former Indian cricket team captain Dhoni is going viral on the internet.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் புதிய தோற்றத்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தபோது, விளையாட்டின் இக்கட்டான தருணத்தில் கூல் ஆக செயல்பட்டு சக வீரர்களை திறமையுடன் நடத்தி,அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற மகேந்திர சிங் தோனி,அனைத்து சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்று விட்டார்.

தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் தோனி,அரபு எமிரேட்ஸில் அடுத்த மாதம் தொடங்கவுள்ள 14-வது ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளார். இதற்காக அவர் தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில்,தோனியின் மாஸ் ஆன,ஸ்டைலான புதிய தோற்றத்தின் புகைப்படம் தற்போது பிரபல சிகையலங்கார நிபுணர் ஆலிம் ஹக்கீமின் இன்ஸ்டாகிராம்,ட்விட்டர் பதிவில் வெளியாகி உள்ளது.மேலும்,இது தொடர்பாக,ஆலிம் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியதாவது:”லெஜண்ட் தோனியின் புதிய அட்டகாசமான தோற்றம் … எங்கள் தலைசிறந்த மாஹிக்கு இந்த ஹேர்கட் செய்வதை மிகவும் ரசித்தேன்”,என்று பதிவிட்டுள்ளார்.

unknown nodeunknown node

இந்த புகைப்படம் அவரது ரசிகர்களால் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது.அதே போல,கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர்,கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனியின் டீம் இந்தியாவின் ரெட்ரோ ஜெர்சி அணிந்த புகைப்படம் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.