உன் உழைப்புக்கு கிடைத்த பரிசு..."ஐபிஎல்" போட்டியில் மகன் அறிமுகம்...தந்தை சச்சின் வாழ்த்து.!!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரை ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரை ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. இதனையடுத்து, நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கர் விளையாடினார். இதன் மூலம் அவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார்.

unknown node

அவருக்கு ரசிகர்கள் மற்றும் சக கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், அவருடைய தந்தை சச்சின் டெண்டுல்கர் “உன்னுடைய கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது” என தனது மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாழ்த்து தெரிவித்து அறிவுரை கூறியுள்ளார்.

unknown node

இது தொடர்பாக சச்சின் டிவிட்டரில் கூறியதாவது ” அர்ஜுன், இன்று நீங்கள் ஒரு கிரிக்கெட் வீரராக உங்கள் பயணத்தில் மற்றொரு முக்கியமான படியை எடுத்துள்ளீர்கள். உங்கள் தந்தையாக, உங்களை நேசிக்கும் மற்றும் விளையாட்டின் மீது ஆர்வமுள்ள ஒருவர். விளையாட்டுக்கு உரிய மரியாதையை நீங்கள் தொடர்ந்து வழங்குவீர்கள்.

unknown node

மேலும், விளையாட்டு உங்களை மீண்டும் நேசிக்கும் என்பதை நான் அறிவேன். நீங்கள் இங்கு வருவதற்கு மிகவும் கடினமாக உழைத்துள்ளீர்கள். உங்கள் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது. நீங்கள் தொடர்ந்து செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன். இது ஒரு அழகான பயணத்தின் ஆரம்பம். வாழ்த்துகள்!” என கூறியுள்ளார்.

unknown node

மேலும் நேற்று நடைபெற்ற போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கர் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. 2 ஓவர்கள் பந்து வீசி 17 ரன்கள் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.