இந்தியாவில் உலககோப்பை கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்.. போட்டி அட்டவணை இன்று வெளியிடு.!

உலககோப்பை கிரிக்கெட் போட்டியானது இந்த வருடம் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்தியாவில் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம், மும்பை

ICC WC2023

இந்தியாவில் நடைபெற உள்ள உலககோபப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை இன்று வெளியாக உள்ளது.

உலககோப்பை கிரிக்கெட் போட்டியானது இந்த வருடம் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்தியாவில் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம், மும்பை வான்கடே மைதானம், சென்னை சேப்பாக்கம் மைதானம்  திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு மைதானங்களில் நடைபெற உள்ளது.

உலககோப்பை கிரிக்கெட் போட்டியானது அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி இறுதி போட்டி நடைபெற உள்ளது. 12 நகரங்களில் இந்த போட்டியானது நடைபெற உள்ளது. இந்தியா தலைமை ஏற்று நடத்த உள்ள இந்த போட்டியின் அட்டவணையானது இன்று வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய கிரிக்கெட் அணி ஆனது கடைசியாக 2011 50 ஓவர் உலக கோப்பையை வென்றது. அதன் பிறகு 2013இல் ஐசிசி சாம்பியன் டிராபி கோப்பையை வென்றது. அதன் பிறகு 10 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் ஐசிசி கோப்பையை வெல்லாத இந்திய கிரிக்கெட் அணி இந்த முறை சொந்த மண்ணில் நடக்கும் இந்த உலக கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.