நேற்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதியது.இப்போட்டியில் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணியில் தொடக்க வீரர்களாக தமீம் இக்பால், சவுமியா சர்க்கார் ஆகியோர் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய தமீம் இக்பால் 9 ஒவரில் 16 ரன்னில் அவுட் ஆனார்.
unknown nodeபின்னர் ஷகிப் அல் ஹசன் களமிறங்கினர்.அருமையாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்திய சவுமியா சர்க்கார் 46 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார்.அதன் பின் ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம் இவர்களின் கூட்டணி ஓன்று சேர தென்னாப்பிரிக்கா அணியின் பந்துகளை பறக்க விட்டனர்.பின்னர் களமிறங்கிய முகமது மிதுன் 21 , முஷ்பிகுர் ரஹிம் 78 , மொசாடெக் ஹொசைன் 26 ரன்னிலும் வெளியேறினார். இறுதியாக பங்களாதேஷ் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 330 ரன்கள் குவித்தனர்.பங்களாதேஷ் அணியில் அதிகபட்சமாக ஷகிப் அல் ஹசன் 75 ரன்கள் குவித்தார்.
unknown nodeதென்னாப்பிரிக்கா அணியில் கிறிஸ் மோரிஸ், பெஹல்குவேவ் ,இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டை பறித்தனர். தென்னாப்பிரிக்கா அணி 331 இலக்குடன் களமிறங்கியது தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய க்வின்டன் டி காக் 23 ரன்னில் வெளியேறினார்.ஐடென் மார்கரம் , டு பிளெஸ்ஸிஸ் இருவரின் கூட்டணியில் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது.பிறகு இவர்களின் கூட்டணியை சாகிப் பிரித்தார். ஐடென் மார்கரம் 45 , டு பிளெஸ்ஸிஸ் 62 , மில்லர் 38 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.
unknown nodeஇறுதியாக தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 309 ரன்கள் எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.மேலும் தென்னாப்பிரிக்கா அணி விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வியடைந்து உள்ளது.