நடப்பு உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் 105 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டை இழந்தது.பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
unknown nodeஇரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோதியது.அப்போட்டியில் பாகிஸ்தான் அணி 348 ரன்கள் எடுத்தது.பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 9 விக்கெட்டை இழந்து 334 ரன்கள் எடுத்தது.அதனால் அப்போட்டியில் பாகிஸ்தான் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.பாகிஸ்தான் தனது மூன்றாவது போட்டியை இலங்கை அணியுடன் விளையாட இருந்தது.மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது.அதனால் இரு அணிகளும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
unknown nodeஇந்நிலையில் நடப்பு உலக்கோப்பையில் நடப்பது போல 1992-ம் ஆண்டு உலகக்கோப்பையில் முதல் போட்டியில் தோல்வியும் ,இரண்டாம் போட்டி வெற்றியும் பெற்றது. மூன்றாவது போட்டி மழை காரணமாக நின்றது.அந்த வருட இறுதி போட்டியில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையை கைப்பற்றியது.அதேபோல இந்த வருடமும் நடப்பதால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.1992WC1st Match – Lost2nd Match – Won3rd Match – No ResultAnd Won World Cup2019WC1st Match – Lost2nd Match – Won3rd Match – No Result*