CSK-வின் விளம்பர தூதராக பிரபல பாலிவுட் நடிகை.? வெளியான சூப்பர் தகவல்.... 

இந்திய அளவில் வியாபார ரீதியிலாக விளையாடப்படும் உலக அளவில் மிக பிரபலமான கிரிக்கெட் தொடராக இந்தியன் பிரீமியர் லீக் தொடர் (IPL) 2008 தொடங்கப்பட்டு இதுவரை 16

Chennai super kings - Katrina Kaif

இந்திய அளவில் வியாபார ரீதியிலாக விளையாடப்படும் உலக அளவில் மிக பிரபலமான கிரிக்கெட் தொடராக இந்தியன் பிரீமியர் லீக் தொடர் (IPL) 2008 தொடங்கப்பட்டு இதுவரை 16 சீசன்களை கடந்துள்ளது. அதில் 14 சீசன்களில் விளையாடி 12 முறை பிளே ஆஃப் சுற்று, 5 முறை சாம்பியன் என ரசிகர்களின் மிக விருப்பமான அணியாக விளங்குகிறது மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

#INDvsENG : ராஜ்கோட்டில் நடைபெறவுள்ள 3வது டெஸ்டில் இருந்து கே.எல்.ராகுல் விலகல்

இந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஸ்பான்சராக அண்மையில் Etihad Airways – எடிஹட் ஏர்வேஸ் எனும் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டு, இன்று அதற்கான Etihad Airways – எடிஹட் ஏர்வேஸ் பெயர் பொரித்த புதிய CSK ஜெர்சியும் அண்மையில் வெளியிடப்பட்டது.

இதனை அடுத்து தற்போது புதிய தகவலும் வெளியாகி உள்ளது. அதவாது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய விளம்பர தூதராக நடிகை கத்ரினா கைப் நியமிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது. முன்னதாக கத்ரினா கைஃப் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் விளம்பர தூதராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஹ்ரித்திக் ரோஷன், அக்சய் குமார், தீபிகா படுகோனே உள்ளிட்ட முக்கிய பாலிவுட் பிரபலங்கள் மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட அணிகளுக்கு விளம்பர தூதராக இருந்துள்ளனர். சென்னை அணிக்கு M.S.தோனி விளம்பர தூதராக இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.