பாலிவுட் சூப்பர் ஸ்டாரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளருமான ஷாருக்கான் நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக நடைப்பெற்ற போட்டியை பார்ப்பதற்கு மைதானத்திற்கு நேரில் வருகை தந்திருந்தார். இந்த போட்டியில் பெங்களூர் அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றிபெற்றது.
unknown nodeஇந்த போட்டி முடிந்த பிறகு ஈடன் கார்டன்ஸ் மைதானத்திற்குள் சென்ற ஷாருக்கான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட்கோலியை சந்தித்தார். விராட்கோலியை பார்த்தவுடன் வேகமாக கட்டிப்பிடித்து ஷாருக்கான் நலம் விசாரித்தார்.
unknown nodeபிறகு விராட்கோலியுடன் இணைந்து, பதான் படத்தில் இடம்பெற்றிருந்த பாடலுக்கு நடனம் ஆடினார்கள். இதற்கான வீடியோவும் புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் ” அருமையான நட்பு” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
unknown nodeShahRukhKhan
விராட்கோலியிடம் பேசிவிட்டு சென்ற ஷாருக்கான் நேற்றய போட்டியில் 29 பந்துகளில் 68 ரன்கள் எடுத்ததற்காக ஆட்ட நாயகன் விருதை வென்ற ஷர்துல் தாக்கூரை ஷாருக்கான் கட்டியணைத்து பாராட்டினார்.