இது சூப்பர் மேன் இல்லை.. கே.எல்.ராகுல்!

The first T20 match against England took place yesterday, in which he flew like a super man and got caught. K. L. Rahul.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டி நேற்று நடந்த நிலையில், இதில் சூப்பர் மேனை போல பறந்து கேட்ச் பிடித்து அசத்தினார். கே.எல்.ராகுல்.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர், நேற்று முதல் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில், அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 124 ரன்களை எடுத்தது. 125 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற சொற்ப இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. 15.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி, 130 ரன்கள் எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில் நான்காம் ஓவரை அக்சர் பட்டேல் வீசினார். அப்பொழுது பேட்ஸ்மேனாக நின்றுகொண்டிருந்த ஜோஸ் பட்லர், பந்தை பவுண்ட்ரி நோக்கி தூக்கி அடித்தார். அப்பொழுது கே.எல்.ராகுல், பவுண்ட்ரி லைனிற்கு மேல் பறந்து பந்தை சூப்பர்மேன் போல பறந்து தடுத்தார். அதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்பொழுது வைரலாகி, ராகுலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றனர்.