ஜோஸ் பட்லர் 112 மீட்டர் சிக்ஸர் அடித்து ஐபிஎல் 2023 இன் இரண்டாவது பெரிய சிக்ஸரை பதிவு செய்தார்.
இந்த சீசன் ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் அருமையாக விளையாடி வருகிறார் என்றே கூறலாம். ஒவ்வொரு போட்டிகளிலும் சிக்ஸர்கள், பவுண்டரிகள் என விளாசி வருகிறார். நேற்று லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கூட 40 ரன்கள் குவித்திருந்தார்.
unknown nodeஇந்நிலையில், நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் ஜோஸ் பட்லர் 112 மீட்டர் அதிகபட்சமாக அடித்து ஐபிஎல் 2023 இன் இரண்டாவது பெரிய சிக்ஸரை பதிவு செய்தார். ராஜஸ்தான் அணியின் இன்னிங்ஸின் போது ஜோஸ் பட்லர் பேட்டிங் செய்துகொண்டிருந்தார்.
unknown nodeஅப்போது லக்னோ அணியின் பந்து வீச்சாளர் யுத்விர் சிங் சரக் 5-வது ஓவரை வீசினார். அப்போது ஜோஸ் பட்லர் யுத்விர் சிங் வீசிய பந்தை சிக்ஸர்க்கு விளாசினார். அந்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த ராட்சத சிக்ஸர் தான் இந்த வருடத்தில் அதிகம் மீட்டர் கொண்ட இரண்டாவது சிக்ஸர்.
unknown nodeஇவருக்கு முன்பு ஆர்சிபியின் ஃபாஃப் டு பிளெசிஸ் 115 மீட்டர் சிக்ஸர் விளாசி இருந்தார். அந்த சிக்ஸர் தான் ஐபிஎல் 2023 அதிகம் மீட்டர் கொண்ட முதல் சிக்ஸர். அவரை தொடர்ந்து 112 மீட்டருக்கு பட்லர் அடித்த சிக்ஸர் இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும் நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.