சல்யூட் மேனுக்கே! திருப்பி சல்யூட் அடித்த முகமது ஷமி !

நேற்று முன்தினம்  நடந்த போட்டியில் இந்திய அணி ,வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது. இப்போட்டி  மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட்  மைதானத்தில்

நேற்று முன்தினம்  நடந்த போட்டியில் இந்திய அணி ,வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது. இப்போட்டி  மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட்  மைதானத்தில் நடைபெற்றது. போட்டி டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 268 ரன்கள் எடுத்தது.பின்னர் இறங்கியவெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 143 ரன்கள் எடுத்து 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

unknown node

இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேக பந்து வீச்சாளர் ஷெல்டன் கோட்ரெல் விக்கெட்டை பறித்த உடன் விக்கெட்டை பறிக்கொடுத்த வீரருக்கு கோட்ரெல் வீரநடை போட்டு சல்யூட் வைப்பது வழக்கமாக நடப்பது தான்.இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணியின் வீரர்கள் ஹார்திக் பாண்டிய ,ஷமி  இருவரும் இவரிடம் விக்கெட்டை பறிகொடுத்து. கோட்ரெல் சல்யூட்டை  பரிசாக வாங்கினார். பின்னர் களமிங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களின் பந்தில் வரிசையாக விக்கெட்டை இழந்தனர்.

unknown node

வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டை இழந்த பின்னர் 9 விக்கெட்டுக்கு ஷெல்டன் கோட்ரெல் களமிறங்கினர். பந்து ரன்கள் எடுத்து சாஹல் பந்து வீச்சில் கோட்ரெல்  அவுட் ஆனார். அப்போது இந்திய அணியின் வேக பந்து வீச்சாளர் ஷமி கோட்ரெல் போல சல்யூட்  செய்தார் .அவர் சல்யூட்  செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.ஷமி  செய்த சல்யூட்டுக்கு சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

unknown node