இன்று நடைபெறுவது “பாக்ஸிங் டே டெஸ்ட் ” ஏன் இப்படி அழைக்கப்படுகிறது ?

இந்தியா vs ஆஸ்திரேலியா வுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை டிசம்பர் 26 தொடங்குகிறது.இந்த 2வது டெஸ்ட் போட்டி என்று அழைக்கப்படுகிறது.இப்போட்டியானது ஆஸ்திரேலியாவில், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (எம்.சி.ஜி) நடைபெறுகிறது.
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி என்றால் என்ன?
கிறிஸ்மஸின் அடுத்த நாளில் நடக்கும் டெஸ்ட் போட்டியானது,காமன்வெல்த் நாடுகளான ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறும். ஆனால், மிகவும் பிரபலமானது ஆஸ்திரேலியாவின் அடையாளமான மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (எம்.சி.ஜி) நடைபெறுவதுதான்.
சண்ட செய்யணுமோ ?
இப் போட்டியானது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26 முதல் 30 வரை நடத்தப்படுகிறது.ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலிய தரப்புக்கு இடையேயும் அல்லது அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அணியுடன் வழக்கமாக நடைபெறுகிறது.
சரி, இங்கே பாக்ஸிங் என்பது பாதுகாப்பு கையுறைகளை அணிந்துகொண்டு இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டையிட வேண்டும் என்று அர்த்தமில்லை , ஆனால் டிசம்பர் 26, பாக்ஸிங் டே என்று ஏன் அழைக்கப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.
இது கிறிஸ்துமஸுக்கு அடுத்த நாள் திறக்கப்படும் தேவாலயங்களில் உள்ள ஏழைகளுக்கு உதவ வைக்கப்பட்டுள்ள காணிக்கை பெட்டிகளைக் குறிக்கிறது.இந்த பெட்டிகள் மூலம் கிறிஸ்துமஸ் தினத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது.
முதல் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி :
இந்த பாக்ஸிங் டே டெஸ்ட் மற்றும் கிரிக்கெட்டைப் பற்றி நாம் பேசினால், அதன் வரலாறு 128 ஆண்டுகள் பழமையானது, முதல் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி 1892 ஆம் ஆண்டில் கிறிஸ்துமஸ் காலத்தில் ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டியில் எம்.சி.ஜி யில் விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் விளையாடியதாகக் கூறப்படுகிறது.
முதல் சர்வதேச பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி :
முதல் சர்வதேச பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான 1950–51 ஆஷஸ் டெஸ்ட் தொடரின் போது நடைபெற்றது. அந்த ஆண்டு, மெல்போர்ன் டெஸ்ட் டிசம்பர் 22 முதல் 26 வரை, இந்த போட்டியானது ஐந்து நாட்கள் நடைபெற்றுள்ளது .
இருப்பினும், 1952 இல் தென்னாப்பிரிக்காவின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, 1953 முதல் 1966 வரை பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகள் எதுவும் நடத்தப்படவில்லை.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா எத்தனை முறை பாக்ஸிங் டே டெஸ்ட் விளையாடியது?
இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பாக்ஸிங் டே டெஸ்டில் எட்டு முறை பங்கேற்றுள்ளது. அந்த போட்டிகள் 1985, 1991, 1999, 2003, 2007, 2011, 2014, மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றுள்ளது.
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் வெற்றி எண்ணிக்கை என்ன?
விளையாடிய மொத்த போட்டிகள்: 8
ஆஸ்திரேலியா வென்றது: 5
இந்தியா வென்றது: 1
சமன்: 2