டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏப்ரல் 14 சனிக்கிழமையன்று நடந்த போட்டிக்கு முன்னதாக விராட் கோலியை ரிக்கி பாண்டிங்கின் மகன் பிளெட்சர் வில்லியம் பாண்டிங் சந்தித்தார்.
unknown nodeகோலியை பார்த்தவுடன் வியப்பில் ஆழ்ந்த பிளெட்சர் வில்லியம் வெட்கப்பட்டார். பிறகு அவனது கையை பிடித்துக்கொண்டு தந்தை ரிக்கி பாண்டிங் விராட்கோலியை அறிமுகம் செய்து வைத்தார். உடேன சிரித்துக்கொண்டு விராட்கோலியிடம் பேசினார்.
unknown nodeஇது தொடர்பான வீடியோக்களை டெல்லி அணி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதற்கான வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் “மாஸ்டர் ஆஃப் கவர் டிரைவ் மற்றும் புல் ஷாட்டை ஒரே ஃப்ரேமில் பார்க்கிறேன்” என பதிவிட்டு வருகிறார்கள்.
unknown nodeமேலும், சந்திப்பதற்கு முன்னதாக ரிக்கி பாண்டிங்கின் மகன் பிளெட்சர் வில்லியம் அங்கு வலைப்பயிற்சியில் தனது தந்தையுடன் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார் . அந்த அபிமான வீடியோவையும் டெல்லி அணி பகிர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.