என்ன பிரச்சனை..? சவுரவ் கங்குலியை 'அன்ஃபாலோ' செய்த விராட் கோலி.!!

இன்ஸ்டாகிராமில் சவுரவ் கங்குலியை விராட் கோலி 'Unfollow' செய்தார்.

இன்ஸ்டாகிராமில் சவுரவ் கங்குலியை விராட் கோலி ‘Unfollow’ செய்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டி முடிந்து இரு அணி வீரர்களும் துணை ஊழியர்களும் வழக்கமான கைகுலுக்கலுக்கு சென்றனர். அப்போது விராட் கோலி ஃபாஃப் டு பிளெசிஸுக்குப் பின்னால் இருந்தார், கங்குலி டெல்லி தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கிற்குப் பின்னால் இருந்தார்.

கங்குலி டு பிளெசிஸுடன் கைகுலுக்கினார், மேலும் கோலியை வாழ்த்த அவர்  வந்தபோது, ​​கோலி அதனை மறுத்தார். அதைபோல், கை குலுக்குவதற்கு முன்னதாக, போட்டியின் போது, டெல்லி கேபிடல்ஸ் இன்னிங்ஸின் 18-வது ஓவரில் அமன் கானின் கேட்சை எடுத்த பிறகு, டெல்லி கேபிடல்ஸ் டக் அவுட்டில் கங்குலி அமர்ந்திருந்தார். அவரை பார்த்து கோலி முறைத்தார்.

unknown node

இது தொடர்பான வீடியோக்கள். புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.  இதனையடுத்து, பலரும் இவர்கள் இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை..? என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த சூழலில் விராட்கோலி இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்திருந்த கங்குலியை அன்ஃபாலோ செய்தார். இந்த சம்பவம் தற்போது பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது.

முன்னதாக கங்குலி பிசிசிஐ தலைவராக இருந்தபோதே  விராட் கோலிக்கும் அவருக்கு இடையே மனக்கசப்பு இருந்ததாகவும், இதனால், இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து அதிரடியாக விராட் கோலி நீக்கப்பட்டார் என விமர்சனங்கள் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.