மும்பைனு வந்துட்டாலே ‘தல’ வேற லெவல் ..! ஏன் தெரியுமா ?

MSDhoni vs MI [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் மிகவும் எதிர்பார்க்கபடும் போட்டிகளில் ஒன்று தான் மும்பை, சென்னை அணிகளுக்கு இடையே ஆன போட்டி. அதில் சென்னை அணியின் தோனி, மும்பை அணிக்கு எதிராக செய்த சில சம்பவங்ககளை பற்றி பார்ப்போம்.

ஐபிஎல் தொடரில் எல்-க்ளாசிக்கோ (EL-Classico) என்றால் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டி தான். இந்த இரு அணிகளுக்கும் போட்டி என்றாலே அது ஒரு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு என்பது இருக்கும் என்பது நமக்கு தெரியும். மும்பை இந்தியன்ஸ் உடன் போட்டி என்றாலே சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு ஒரு தனி உத்வேகம் என்பது வந்து விடும். மும்பை அணியுடன் அவர் செய்த சில சாதனைகளை பற்றி தற்போது பார்ப்போம்.

மும்பைக்கு எதிராக தோனியின் சிறப்பான ஆட்டம் என்றால் 2012-ம் ஆண்டு நடைபெற்ற எலிமினேட்டர் போட்டி தான். அந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி சென்னை அணியை பேட்டிங் செய்ய கூறியது.இதனால், பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து இழக்கவும் சென்னை அணி ஆபத்தின் விளும்பில் இருந்தது. இருப்பினும், எஸ். பத்ரிநாத் மற்றும் மைக்கேல் ஹஸ்ஸி ஆகியோர் இன்னிங்ஸை பொறுமையுடன் கொண்டு சென்றார்கள்.

அதன் பிறகு களமிறங்கிய எம்.எஸ்.தோனி வெறும் 20 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். அதிலும் லசித் மலிங்காவின் பந்துவீச்சில் ஹெலிகாப்டர் ஷாட்டை அடித்து பறக்கவிட்டார். இதன் மூலம் சென்னை அணி 20 ஓவர்களில் 187/5 ரன்களை குவித்தது. அதை தொடர்ந்து, சென்னை பவுலர்கள் சிறப்பான பந்து வீச்சில் மும்பை அணியை 38 ரன்களில் வீழ்த்தி மும்பை அணியை எலிமினேட்டர் போட்டியில் இருந்து சென்னை அணி வெளியேற்றியது.

2008 முதல் தற்போது வரை சிஎஸ்கே அணியில் மும்பை அணிக்கு எதிராக அதிக ரன் அடித்த பட்டியலில் தோனி முதலிடத்தில் இருக்கிறார், அவர் 748 ரன்களை மும்பை அணிக்கு எதிராக அடித்துள்ளார். மேலும், மும்பை அணிக்கு எதிராக 129.18 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி இருக்கிறார். அதிலும் மும்பை அணியுடன் அவர் அடித்த அதிக பட்ச ஸ்கோர் 63* நாட் அவுட் தான். அதிலும், மும்பை அணிக்கு எதிராக 3 முறை அரை சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தோனி இதுவரை ஐபிஎல்லில் மொத்தம் 242 சிக்ஸர்களை அடித்துள்ளார் அதிலும் குறிப்பாக மும்பை அணியுடன் மட்டும் 34 சிக்ஸர்களை பதிவு செய்துள்ளார். இவ்வாறு இருந்தும் தோனிக்கு மும்பை அணியில் வினாயக இருப்பது வேக பந்து வீச்சாளரன ஜஸ்பிரீத் பும்ரா மட்டும் தான். பும்ரா, தோனியை 3 முறை ஆட்டமிழக்க செய்துள்ளார் அதிலும் ஐபிஎல் வரலாற்றில் பும்ராவின் 61 பந்துகளை சந்தித்த இவர் 69 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். மேலும், 98.36 என்ற மோசமான ஸ்ட்ரைக் ரேட்டையும் பும்ராவுக்கு எதிராக தோனி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Ganga Expressway IAF
pm modi - kerala port
Retro
ADMK Chief secretary Edappadi Palanisamy
Minister Anbil Mahesh
US Vice President JD Vance