#CricketUpdate:நான்காவது டெஸ்ட்டிலிருந்த பும்ரா விலகியதிற்கு இதுதான் காரணம்

This is the reason why Bumrah was ruled out of the fourth Test with no injuries

இந்தியாவின் வலது கை வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது மற்றும் இறுதி டெஸ்டில் இருந்து விலகியதை பிசிசிஐ ஏற்றுக்கொண்டது.

இந்நிலையில் அவரது திடிர் விலகல் பும்ரா உடலை தகுதி பிரச்னையால் விலகினாரா என்ற கேள்வி எழுந்தது இதற்கு விளக்கமளித்துள்ள அதிகாரி ஒருவர்,”பும்ராவிற்கு உடற்தகுதி குறித்து எந்த பிரச்சனையும் இல்லை.

அவர் தான் வளர்ந்த சொந்த ஊரில் தற்பொழுது இருக்கிறார்.தனது வீட்டில் தாயாருடன் தங்கியிருந்த சிறிது ஓய்வெடுக்கவும் நேரத்தை செலவிடவும் விரும்புகிறார்.இதனால் தான் அவர் நான்காவது டெஸ்டில் பங்கேற்காமல்  விலகியதாகவும் அவர் உடற்தகுதியில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறினார்.

கொரோனா பரவலால் நீண்ட நாட்களுக்கு பிறகு பிரீமியர் லீக் மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற  டெஸ்ட்  ,ஒருநாள் போட்டி மற்றும் டி20 களில் பங்கேற்ற பும்ரா கடந்த ஐந்து மாதங்களில் 277.1 ஓவர்கள் வீசியுள்ளார்.