முதல் வெற்றியை பதிவு செய்யுமா சென்னை .? இன்று லக்னோ அணியுடன் மோதல்.!

சென்னையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் சென்னை - லக்னோ அணிகள் பலப்பரீட்சை.

சென்னையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் சென்னை – லக்னோ அணிகள் பலப்பரீட்சை.

16-வது சீசன் ஐபிஎல் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகிறது. இந்த போட்டி சென்னையில் உள்ள சேப்பாக் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

இதற்கு முன்பு இந்த இரண்டு அணிகளும்  இதுவரை 1 போட்டியில் மட்டுமே நேருக்கு நேர் மோதியதில் லக்னோ அணி தான் வெற்றிபெற்றிருந்தது. கடந்த ஆண்டு அறிமுகமான லக்னோ அணி இந்த சீசனின் முதல் போட்டியில் டெல்லி அணியுடன் மோதியது. இதில் லக்னோ அணி தான் 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

அதைப்போல சென்னை அணி இந்த சீசன் முதல் போட்டியில் குஜராத் அணியுடன் மோதியதில் இதில் சென்னை அணி தோல்வி அடைந்தது. இந்நிலையில், இன்று லக்னோ அணியுடன் மோதும் போட்டியில் வெற்றிபெற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்யவேண்டும் என்ற முனைப்பில் சென்னை அணி களமிறங்குகிறது. எனவே இன்று நடைபெறும் இந்த போட்டியில் வெற்றிபெறுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.