கிரிக்கெட் வீரர்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கும் சம ஊதியம் வழங்கப்படும்- பிசிசிஐ

இந்திய கிரிக்கெட்டில் இனி வீரர்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கும் சம ஊதியம் வழங்கப்டும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட்டில் இனி வீரர்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கும் சம ஊதியம் வழங்கப்டும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளும் இனி ஆடவர் கிரிக்கெட் வீரர்களுக்கு இணையாக ஊதியம் பெறுவார்கள் என பிசிசிஐ அறிவித்துள்ளது. மகளிர் ஆசியக்கோப்பையை இந்திய மகளிர் அணி சமீபத்தில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் இனி மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள், ஆடவர்களைப் போன்றே டெஸ்ட் போட்டிக்கு 15 லட்சம் ரூபாயும், ஒருநாள் போட்டிக்கு 6 லட்சம் ரூபாயும், டி-20 போட்டிக்கு 3 லட்சம் ரூபாயும் பெறுவார்கள் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

unknown node