மகளீர் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
unknown node6-வது மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டியில், முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து அணியும்,ஆஸ்திரேலிய அணியும் மோதியது.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
unknown nodeபின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 15.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 106 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.நான்காவது முறையாக கோப்பையை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி சாதனை படைத்துள்ளது.