இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இப்பொது இருக்கும் தலைமுறையில் சிறந்த கிரிக்கெட் வீரர் என்று கூறலாம். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். இந்நிலையில், சமீபத்தில், 9 ஆம் வகுப்பு ஆங்கில தேர்வின் போது வினாத்தாளில் கோலியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
அந்த வினாத்தாளில் விராட் கோலி கடந்த 2022 ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு, அவரைப் பற்றி 100 வரிகளில் பதில் எழுதவும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதை கோலி ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
unknown nodeஇதற்கிடையில், வரவிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி விளையாடும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது முதல் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக வரும் ஏப்ரல் 2 -ஆம் தேதி சின்னசாமி மைதானத்தில் விளையாடுகிறது. ஐபிஎல் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கும் விராட் கோலியின் ஆர்.சி.பி அணி மற்றும் ரோஹித் சர்மாவின் மும்பை அணியும் விளையாடுவதால் இந்த போட்டி பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.