WTC Final : தோல்வியே சந்திக்காத பவுமா…இறுதிப்போட்டியில் வீழ்த்துமா ஆஸ்திரேலியா?
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளது.

லண்டன் : நாளை நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது. இந்தப் போட்டி, இரு வலுவான அணிகளுக்கு இடையேயான பரபரப்பான மோதலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், ஆஸ்திரேலியா, தனது அனுபவமிக்க வீரர்கள் மற்றும் ஆக்ரோஷமான விளையாட்டு முறையால் மிகவும் பெயர் பெற்ற அணி என்பதை சொல்லியே தெரியவேண்டாம். அதே சமயம், பவுமாவின் தலைமையில் தென்னாப்பிரிக்கா, தனது பந்துவீச்சு மற்றும் பேட்டிங் திறன்களால் இந்தப் போட்டியில் மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்குகிறது.
ஆஸ்ரேலியா வலுவான அணியாக இருந்தாலும் கூட தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமாவின் தலைமையில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனையைப் படைத்துள்ளது. இதுவரை அவர் தலைமையில் விளையாடிய 9 டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா தோல்வியைச் சந்திக்கவே இல்லை. இந்தப் போட்டிகளில் 8 வெற்றிகளையும், ஒரு போட்டி டிராவிலும் முடிவடைந்துள்ளது.
எனவே, பவுமாவின் தலைமைத்துவத்தின் கீழ் அணி காட்டிய ஒருங்கிணைந்த ஆட்டமும், மன உறுதியும் உலக கிரிக்கெட் அரங்கில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த சாதனை, தென்னாப்பிரிக்காவை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்கு தகுதி பெறச் செய்துள்ளது.
டெம்பா பவுமா, ஒரு கேப்டனாக மட்டுமல்லாமல், ஒரு மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் தனது திறமையை நிரூபித்துள்ளார். அவரது அமைதியான மற்றும் தெளிவான முடிவெடுக்கும் திறன், அணியை பல சவாலான சூழ்நிலைகளில் வெற்றிகரமாக வழிநடத்தியுள்ளது. குறிப்பாக, கடினமான பிட்ச்களிலும், எதிரணியின் வலுவான பந்துவீச்சு தாக்குதல்களையும் எதிர்கொண்டு, அவரது தலைமையில் அணி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
எனவே, ஆஸ்ரேலியாவுக்கு தென்னாப்பிரிக்கா சவாலாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். நாளை நடைபெறும் போட்டியில் அவருடைய இந்த சாதனை தொடருமா? அல்லது ஆஸ்ரேலியா தகர்த்தெறிந்து புதிய சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தென்னாப்பிரிக்கா (விளையாடும் XI): ஐடன் மார்க்ராம், ரியான் ரிகெல்டன், வியான் முல்டர், டெம்பா பவுமா(கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் பெடிங்ஹாம், கைல் வெர்ரெய்ன்(கேப்டன்), மார்கோ ஜான்சன், கேஷவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி நிகிடி
ஆஸ்திரேலியா (விளையாடும் XI): உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, கேமரூன் கிரீன், ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி(கேப்டன்), பாட் கம்மின்ஸ்(கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஜோஷ் ஹேசில்வுட்