நீ முட்டாள் இல்லை, நான்தான் முட்டாள்...தோனி டென்ஷனான கதையை உடைத்துவிட்ட தீபக் சாஹர்!

எப்போதும் கூலாக இருக்கும் தோனி ஒருமுறை டென்ஷனான விஷயம் குறித்த தகவலை தீபக் சாஹர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

deepak chahar and dhoni

டெல்லி :சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் தீபக் சாஹர், பிக் பாஸ் 19-ன் ஃபேமிலி வீக் நிகழ்ச்சியில் ஒரு பழைய சம்பவத்தை நினைவுகூர்ந்தார். எப்போதும் அமைதியாக இருக்கும் எம்.எஸ். தோனி ஒருமுறை மட்டும் கோபத்தில் அவரிடம் “நீ முட்டாள் இல்லை, நான்தான் முட்டாள்” (Tu bewakoof nahi, main bewakoof hoon) என்று சொன்னதாகக் கூறினார். இது IPL 2019 சீசனில் நடந்த ஒரு போட்டியின் போது நிகழ்ந்தது. இந்தச் சம்பவம் ரசிகர்களிடம் மீண்டும் பேசப்பட்டு வருகிறது.

IPL 2019-ல் சென்னை எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் vs கிங்ஸ் XI பஞ்சாப் (தற்போது பஞ்சாப் கிங்ஸ்) போட்டி நடைபெற்றது. CSK 160 ரன்கள் எடுத்திருந்தது. பஞ்சாப் 39 ரன்கள் தேவை, கடைசி 12 பந்துகள் மீதமிருந்த நிலையில் தோனி இளம் வீரர் தீபக் சாஹரிடம் கடைசிக்கு முந்தைய ஓவரைக் கொடுத்தார். அப்போது சாஹருக்கு டெத் ஓவர்கள் பந்துவீசும் அனுபவம் அதிகம் இல்லை. ஆனால் தோனி நம்பிக்கை வைத்தார்.

ஓவரின் முதல் பந்தே வேஸ்ட் ஹை நோ-பால்! சர்பராஸ் கான் அதை பவுண்டரிக்கு அடித்தார். அடுத்த பந்தும் நோ-பால்! மேலும் 2 ரன்கள். இரண்டு  பந்துகள் கூட வீசாமல் 8 ரன்கள் போய்விட்டன. ஸ்டேடியம் முழுக்க பதற்றம். தோனி கோபத்தில் நடந்து வந்து சாஹரிடம் “நீ முட்டாள் இல்லை, நான்தான் முட்டாள்” என்று கத்தினார். சாஹர் அந்த நொடியில் தனது கேரியர் முடிஞ்சிட்டதா என்று நினைத்துவிட்டார். “இனி ஒருநாளும் டெத் ஓவர்கள் எனக்கு கிடைக்காது” என்று பயந்தேன் எனவும் சாஹர் கூறியுள்ளார்.

ஆனால் அந்தக் கோபத்தை உந்து சக்தியாக மாற்றிக்கொண்ட சாஹர், மீதமுள்ள 6 பந்துகளில் வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். முக்கியமாக டேவிட் மில்லரின் விக்கெட்டையும் வீழ்த்தினார். மொத்தத்தில் அந்த ஓவரில் 13 ரன்கள் மட்டுமே கொடுத்தார். ஆரம்பத்தில் 20+ ரன்கள் போகும் என்று தோன்றிய ஓவரை 13 ரன்களுக்குள் முடித்து, போட்டியையே திருப்பிப்போட்டார். சென்னை அந்தப் போட்டியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

தோனியின் அந்தக் கோபம் “என்னை நம்பி ஓவரைக் கொடுத்துவிட்டு நான் தோற்றேன்” என்ற பொறுப்புணர்வில் வந்ததே தவிர, சாஹரைத் திட்டுவதற்காக இல்லை. அதைப் புரிந்துகொண்ட சாஹர் பயத்தை வென்று அற்புதமாக பந்துவீசினார். இந்தச் சம்பவம் தோனியின் அரிய கோபத்தையும், அவரது தலைமைத்துவத்தில் எப்படி வீரர்கள் மீண்டும் எழுந்து நிற்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது. சாஹர் இன்றும் “அந்த ஒரு ஓவர்தான் என்னை டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டாக மாற்றியது” என்று சொல்கிறார்.