தோனி என் மீது அதிகமாக நம்பிக்கை வைத்திருந்தார் – யுவராஜ்..!

Default Image

இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி என்மீது அதிகமாக நம்பிக்கை வைத்திருந்ததாக யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

கிரிக்கெட் போட்டியில் யுவராஜ் சிங்கை பிடிக்காதவர் யாரும் இருக்கமுடியாது, இவர் பல சாதனைகளையும் கையில் வைத் திருக்கிறார், குறிப்பாக யுவராஜ் சிங் என்று கூறினால் இங்கிலாந்துக்கு எதிராக அவர் அடித்த 6பந்துகளில் 6 சிக்ஸர்கள் தான், இந்த சாதனையை எந்த ஒரு இந்தியன் கிரிக்கெட் வீரர்களும் அந்த சாதனையை முறியடிக்கவில்லை என்றே கூறலாம்.

இந்நிலையில் மேலும் யுவராஜ் சிங் இந்திய 2011 உலகக்கோப்பையை வெல்ல உதவியாக இருந்தவர் என்றும் கூட கூறலாம் அந்த தொடரில் அவருடைய மொத்த ரன்கள் 362 மேலும் 15 விக்கெட்டுகளை சாய்த்தவர்.இந்நிலையில் தற்போது தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பேட்டியளித்துள்ள அவர் கூறுகையில் “நான் கிரிக்கெட்டில் நீண்ட நாள் கழித்து கம்பேக் கொடுத்து மீண்டும் அணிக்குள் திரும்பி வந்தபோது எனக்கு விராட் கோலி ஆதரவளித்தார்.

மேலும் விராட் கோலி அவர் என்னை ஆதரவிக்கவில்லை என்றால் என்னால் மீண்டும் விளையாடி இருக்க முடியாது, மேலும் கடந்த 2019 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் தேர்வு குழுவினர் எனது பெயரை பரிசீலிக்கவில்லை என எனக்கு சொன்னதே தோனி தான்.

இந்நிலையில் நான் 2015 ஆம் ஆண்டு வாக்கில் மீண்டும் இந்திய அணிக்கு நோய்வாய்ப்பட்டு திரும்பி வந்த போது நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து இருந்தன. அதனால் 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை அணியில் என்னை பரிசு அளிக்காதது ஏமாற்றம் தான் என்று தெரிவித்துள்ளார். மேலும் தனது எதிர்காலம் குறித்து எனக்கு சரியான தெளிவை ஏற்படுத்தியவர் தோனி தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்