கலிங்கா சூப்பர் கோப்பையின் 4-வது சீசன் நடைபெற்றது. 2023 ஆண்டு நடைபெற்ற கலிங்கா சூப்பர் கோப்பையின் இறுதிப்போட்டியில் பெங்களூர் – ஒடிசா மோதியது. இப்போட்டியில் ஒடிசா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்த கலிங்கா சூப்பர் கோப்பை தொடரில் 16 சிறந்த அணிகள் இடம்பெறும். தகுதி பெற்ற 16 அணிகளும் தலா நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒற்றை ரவுண்ட்-ராபின் வடிவத்தில் போட்டியிட்டன. அரையிறுதிக்கு ஈஸ்ட் பெங்கால், ஜாம்ஷெட்பூர், மும்பை சிட்டி மற்றும் ஒடிசா ஆகிய 4 அணிகள் இடம்பெற்றனர்.
இந்த 4 அணியில் ஈஸ்ட் பெங்கால் மற்றும் ஒடிசா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. கடந்த ஜனவரி 9 ம் தேதி தொடங்கப்பட்ட இந்த தொடரின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியன் ஆன ஒடிசா அணியை 3-2 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
கே.எல் ராகுல் & ஜடேஜா 2-வது டெஸ்டில் இருந்து விலகல்- பிசிசிஐ அறிவிப்பு..!
விறுவிறுப்பாக சென்ற இந்த ஆட்டத்தின் 39 வது நிமிடத்தில் ஒடிசாவிற்காக முதல் கோலை மொரிசியோ அடித்தார். பின் அரைநேரம் முடியும் வரை ஈஸ்ட் பெங்கால் முயற்சிகள் செய்தும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் அரை நேர முடிவில் 0-1 என்ற கணக்கில் ஒடிசா அணி முன்னிலை வகுத்தது.
அரை நேரம் தொடங்கி ஆட்டத்தின் 52 வது நிமிடத்தில் நந்தா எனும் வீரர், ஈஸ்ட் பெங்கால் அணிக்காக கோலை அடித்து 1-1 என்று சமன் செய்தார். அதன் பின் ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கியது. பின் ஆட்டத்தின் 62 வது நிமிடத்தில் க்ரெஸ்போ வீரர் கோலை அடிக்க இதனால் 2-1 என்ற கணக்கில் ஈஸ்ட் பெங்கால் முன்னிலை வகுத்தது.
அதன் பின் 90(+8) நிமிடத்தில் ஜாஹூ எனும் வீரர், ஒடிசா அணிக்காக சரியான வேலையில் கோலை அடிக்க ஆட்டம் மீண்டும் 2-2 என்ற நிலையில் சமன் ஆனது. அதன் பின் இரு அணிக்கும் கூடுதல் நேரம் கொடுக்கபட்டது. அந்த நேரத்தில் ஆட்டத்தில் 111 வது நிமிடத்தில் ஈஸ்ட் பெங்கால் வீரர் ஒரு கோலை அடிக்க 3-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்று ஈஸ்ட் பெங்கால் கலிங்கா சூப்பர் கோப்பையையும் வென்றது.
