44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தற்போது சென்னை அருகே, சரித்திரப் புகழ் வாய்ந்த மாமல்லபுரம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் தொடக்க விழா பிரமாண்டமாகவும், கோலகமாகவும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த தொடக்க விழாவுக்கான கலை நிகழ்ச்சிகளை திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் இயக்கிருந்தார். அனைவர்க்கும் பிடிக்கும் வகையில், மிகவும் பிரம்மாண்டமாக இந்த கலை நிகழ்ச்சிகள் இருந்ததால், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு ரசிகர்கள், விளையாட்டுப் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோர் பாராட்டுக்களைத் […]