கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குளங்களை ஆக்கிரமித்ததாக எழுந்த புகாரின் பேரில் குளத்தின் ஆக்கிரப்பு பகுதிகள் அதிகாரிகளால் அகற்றப்பட்டது. இந்த குளம் ஆக்கிரமிப்பில் காட்டி கொடுத்ததாக கூறி, தந்தை வீரமலை, மற்றும் அவரது மகனான நல்ல தம்பியும் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக 6 பேர் சரணடைந்துள்ளனர். இந்த வழக்கில் சரியாக விசாரணை நடைபெறவில்லை என கூறி, ஆய்வாளர் பாஸ்கரனை சஸ்பெண்ட் செய்து டிஐஜி பாலகிருஷ்ணன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.