#Ukraine Crisis Live:50 ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களைக் கொன்றதாக உக்ரைன் அறிவிப்பு
நேட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் ஆர்வம் காட்டும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதை தடுக்க ரஷ்யா, அந்நாட்டின் மீது போர் தொடுக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதற்கிடையில், போர் பதற்றத்தை குறைக்க அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகள் முயற்சி செய்து வந்த நிலையில், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் , உக்ரைனில் ரஷ்ய படைகள் தாக்குதல்களை தொடங்கியுள்ளது. […]