Tag: MRK Panneerselvam

தமிழ்நாடு சட்டப்பேரவை: பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்.!

சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு அரசின் பொது நிதிநிலை அறிக்கை கடந்த 14-ஆம் தேதியும், வேளாண்மைக்கான நிதிநிலை அறிக்கையை 15-ஆம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டன. இது திமுக அரசின் ஐந்தாவது பட்ஜெட்டாகும், மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அரசின் முழுமையான கடைசி பட்ஜெட்டாகவும் விளங்குகிறது. இந்நிலையில், இன்று காலை 9:30 மணியளவில் சட்டமன்ற அமர்வு தொடங்குகிறது. இன்றைய நாளில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், […]

#Chennai 4 Min Read
Tamil Nadu Budget 2025

“வேளாண் பட்ஜெட் பெயரில் பொய், புரட்டு” – அண்ணாமலை கடும் விமர்சனம்.!

சென்னை : 2025 – 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக ரூ.42 கோடி மதிப்பீட்டில் மாநிலம் முழுவதும் 1,000 உழவர் சேவை மையங்கள், கோடை உழவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.2,000 மானியம் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டை அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். பயிர்க்கடன் ரூ.1,774 கோடி இன்னும் தள்ளுபடி செய்யப்படவில்லை என பட்ஜெட்டில் கூறப்பட்டதை […]

#Annamalai 5 Min Read
Annamalai - TNAgriBudget

தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026 : வெளியான முக்கிய அறிவிப்புகள் இதோ….

சென்னை : தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 2026-ஐ வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில் கடந்த 4 ஆண்டுகளில் வேளாண்துறையில் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் , அதன் பலன்கள் குறித்தும் பேசினார். அதன் பிறகு வேளாண் பட்ஜெட்டை வாசிக்க தொடங்கினார். அதில் விவசாய நலன் சார்ந்து பல்வேறு புதிய திட்டங்கள், ஏற்கனவே செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு ஆகியவை பற்றியும் அறிவித்தார். தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ல் […]

MRK Panneerselvam 12 Min Read
TN Budget 2025 - 2026 Full details

விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுக வல்லவர்கள்…பட்ஜெட்டில் ஒன்னு இல்லை..இபிஎஸ் காட்டம்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு ரூ. 10.63 கோடி செய்யப்பட்டுள்ளதாகவும், மலர் சாகுபடிக்கு ரூ.8 கோடி எனவும் முக்கிய விஷயங்களை தெரிவித்திருந்தார். இந்த சூழலில், ஏற்கனவே, நேற்று தாக்கல் செய்த பொதுபட்ஜெட் வெறும் பேப்பர் போல இருக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து இன்றும் அதைபோலவே, இன்று அறிவிக்கப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் […]

#Chennai 6 Min Read
edappadi palanisamy Tamil Nadu Agriculture Budget

கரும்பு சாகுபடிக்கு ரூ. 10.63 கோடி…மலர் சாகுபடிக்கு ரூ.8 கோடி! பட்ஜெட்டில் வந்த முக்கிய அறிவிப்பு!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். . வேளாண் பட்ஜெட்டை 5வது முறையாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்துள்ள நிலையில், ஒதுக்கீடு பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளார். அதில், கரும்பு சாகுபடிக்கு ரூ. 10.63 கோடி செய்யப்பட்டுள்ளதாகவும், மலர் சாகுபடிக்கு ரூ.8 கோடி எனவும் முக்கிய விஷயங்களை தெரிவித்திருக்கிறார். கரும்பு சாகுபடி கரும்பு உற்பத்தியில் தமிழ்நாட்டிற்கு 2ம் இடம் பிடித்துள்ளது எனவும், கரும்பு விவசாயிகளுக்கு ரூ.841 […]

#Chennai 5 Min Read
TNAgricultureBudget

வேளாண் பட்ஜெட் 2025 : உழவரைத் தேடி புதிய தொழில்நுட்பங்கள்..,

சென்னை : தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2025 – 2026 நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து இன்று பேரவையில் வேளாண் துறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதில் அத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விவசாயிகளுக்கான புதிய திட்டங்களையும், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை குறித்தும் அறிவித்து வருகிறார். இதில், விவசாயிகளிடத்தில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு சேர்க்கும் பொருட்டு பல்வேறு புதிய திட்டங்களை அமைச்சர் அறிவித்துள்ளார். அதில், உழவரை தேடி எனும் திட்டம் மூலம் விவசாயிகளை […]

mk stalin 3 Min Read
TN Agree Budget 2025 2026 (1)

முதல் பரிசு ரூ.1.5 லட்சம்…நவீன கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பட்ஜெட்டில் வந்த குட் நியூஸ்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ததை தொடர்ந்து இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். வேளாண் பட்ஜெட்டை 5வது முறையாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்துள்ள நிலையில், ஒதுக்கீடு பற்றிய விவரங்களை வெளியீட்டு வருகிறார். தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம் (TNAU) மற்றும் மாநில அரசு, ட்ரோன்கள், IoT-ஆன விவசாய உபகரணங்கள், மற்றும் […]

#Chennai 3 Min Read
agricultural spraye

தமிழக வேளாண் துறையின் சாதனைகள்.., அமைச்சர் கூறிய நீண்ட பட்டியல்….

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து இன்று தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார்.  வேளாண் பட்ஜெட்டை 5வது முறையாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் உரையின் போது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட திமுக அமைச்சர்கள் , எம்எல்ஏக்கள் என […]

#Chennai 8 Min Read
TN Agree budget 2025 2026

“எருமை மாடா நீ? பேப்பர் எங்கே?” உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

தஞ்சாவூர் : இன்றும் நாளையும், தஞ்சையில் வேளாண்துறை சார்பில், தேசிய உணவு தொழில்நுட்ப முனைவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்தல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சி 2 நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகள், விவசாயிகள், தொழில் முனைவோர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேச முன்வந்தார். அவர், மைக் முன்னாடி நின்று கொண்டு பேச முற்படும்போது […]

#Tanjore 3 Min Read
Minister MRK Pannerselvam scold his assistant in Tanjore meeting

டெல்டா கனமழை பாதிப்பு : 13 ஆயிரம் ஹெக்டேர் பயிர் சேதம்! ஆய்வுக்கு பின் அமைச்சர் பேட்டி!

தஞ்சை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாகை முதல் சென்னை வரையிலான வடதமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும்,  டெல்டா மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆயிரக்கணாக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாய நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமனடைந்துள்ளன. இதற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பெரும்பாலான விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய […]

crop damage 4 Min Read
Heavy rain Crop damage in Tamilnadu - Minister MRK Panneerselvam

தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்.! வேளாண்துறையினரின் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் பயண பின்னணி…

விவசாயம்: தமிழக விவசாயத்துறையில் புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். தமிழக விவசாயத்துறையில் உழவர் நலன் சார்ந்த வேளாண் தொழில்நுட்ப ஆய்வுகள், தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக வேளாண்துறை குழுவினர் ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த பயணம் குறித்து தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில், தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கேற்ப வேளாண்மை […]

#DMK 7 Min Read
Tamilnadu Farmers

தமிழக விவசாயிகள் கவனத்திற்கு… அரசின் முக்கிய அறிவிப்பு.!

சென்னை: தமிழக விவசாயிகள் உடனடியாக குறுவை பருவ பயிர்களை காப்பீடு செய்ய வேண்டும் என வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக விவசாயிகள் தங்கள் குறுவை பயிர்களை வரும் ஜூலை 31ஆம் தேதிக்குள் உரிய முறையில் கட்டணம் செலுத்தி பயிர் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய தமிழக வேளாண்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார். 2024-2025ஆம் ஆண்டில் குறுவை, சம்பா மற்றும் கோடை […]

#Farmers 8 Min Read
Tamilnadu Farmers

மலர் கண்காட்சிக்கு கட்டணம் நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு…!

சென்னையில் நாளை மலர்கண்காட்சி தொடங்க உள்ள நிலையில், இந்த கண்காட்சியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தொடங்கி வைக்கிறார். கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி சென்னையில் நாளை மலர்க்கண்காட்சி தொடங்க உள்ளது. இந்த கண்காட்சியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தொடங்கி வைக்கிறார். கலைவாணர் அரங்கில் முதல் முறையாக தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சி நடைபெறும் நிலையில், கண்காட்சி வரும் 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கண்காட்சியில் கலந்து கொள்வோர் கட்டணம் செலுத்தி பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி,  […]

MRK Panneerselvam 2 Min Read
Default Image

பருவமழை பாதிப்பு: எஞ்சிய விவசாயிகளுக்கு 2 நாட்களில் நிவாரணம் – வேளாண் அமைச்சர்

2021ல் வடகிழக்கு பருவமழையின்போது பாதித்த பயிர்களுக்கு ரூ .97.92 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது என்று வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தகவல். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  வடகிழக்கு பருவமழையின்போது அறுவடைக்கு தயாராக இருந்த கார் குறுவை சொர்ணவாரி பயிர்கள் முழுமையாக சேதமடைந்த நிலையில், விவசாயிகளுக்கு இழப்பீடாக எக்டர் ஒன்றுக்கு ரூ.20,000 வழங்கிடவும், சம்பா பருவத்தில் நீரில் மூழ்கி சேதம் அடைந்த பயிர்களை மறுசாகுபடி செய்திட எக்டர் ஒன்றுக்கு ரூ.6038 மதிப்பீட்டில் குறுகிய கால நெல் விதை, நுண்ணுட்ட […]

Agriculture Minister 5 Min Read
Default Image

தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது – அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்!

தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் தக்காளி வரத்து குறைந்துள்ளதுடன், தமிழகத்தில் தக்காளி விலை அதிக அளவில் உயர்ந்துள்ளது. இந்நிலையில் தக்காளி விலை அதிகரித்துள்ளது தொடர்பாக வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆந்திராவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தக்காளி […]

#Tomato 2 Min Read
Default Image

திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா தொற்று உறுதி…!

கடலூர் குறிஞ்சிப்பாடி திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த 3 மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்று குறைந்திருந்த நிலையில், நிலையில், சமீப நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனையடுத்து தற்போது மாக்களுடன் விழுப்புடன் இருக்குமாறும், கொரோனா தொற்றை தடுக்கும் வண்ணம் முக கவசம் அணியுமாறும் அரசு வலியறுத்தி வருகிறது. இந்நிலையில், கடலூர் குறிஞ்சிப்பாடி திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனை அடுத்து, […]

#DMK 2 Min Read
Default Image