முதல் பரிசு ரூ.1.5 லட்சம்…நவீன கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பட்ஜெட்டில் வந்த குட் நியூஸ்!
நவீன கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு 3 பேரில் முதல் பரிசாக ரூ.2.5 லட்சமும், 2ம் பரிசாக ரூ.1.5 லட்சமும் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ததை தொடர்ந்து இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். வேளாண் பட்ஜெட்டை 5வது முறையாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்துள்ள நிலையில், ஒதுக்கீடு பற்றிய விவரங்களை வெளியீட்டு வருகிறார்.
தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம் (TNAU) மற்றும் மாநில அரசு, ட்ரோன்கள், IoT-ஆன விவசாய உபகரணங்கள், மற்றும் தானியங்கி இயந்திரங்கள் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாயத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன. எனவே, இந்த சூழலில் நவீன விவசாய கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என பட்ஜெட் தாக்கல் செய்தபோது எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
அதன்படி, “நவீன வேளாண் கருவிகள், நவீன சாகுபடி தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவற்றை கண்டறிந்து, கடைபிடிப்பதில் சிறந்து விளங்கும் 3 பேரில் முதல் பரிசாக ரூ.2.5 லட்சமும், 2ம் பரிசாக ரூ.1.5 லட்சமும், 3ம் பரிசாக ரூ. 1 லட்சமும் வழங்கப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025