டெல்லி : பிரதமர் மோடி இன்றும் நாளையும் போலந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு, அடுத்து வெள்ளியன்று உக்ரைன் நாட்டிற்கு செல்ல உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று போலந்து நாட்டிற்க்கு பயணம் மேற்கொண்டுள்ளார். போலந்து நாட்டு பயணத்தை முடித்துகொன்டு அடுத்து வரும் வெள்ளியன்று உக்ரைன் நாட்டிற்க்கு செல்ல உள்ளார். முன்னதாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி தற்போது உக்ரைன் பயணம் மேற்கொண்டு இருப்பது உலக நாடுகளை உற்றுநோக்க வைத்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம் பற்றி […]
டெல்லி : ரஷ்யாவுடனான போருக்குப் பின்னர், உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக உக்ரைன் செல்கிறார். ரஷியா – உக்ரைன் போர் தொடங்கியதற்குப் பின்னர், முதல் முறையாக அரசு முறை பயணமாக பிரதமர் மோடி உக்ரைன் நாட்டிற்கு செல்ல உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதனிடையே, 3வது முறையாக பிரதமர் பொறுப்பேற்ற […]
டெல்லி : இன்று உலக சமஸ்கிருத தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, தனது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி உலக சமஸ்கிருத தினம் கொண்டாடப்படுகிறது. பண்டைய கால நூல்கள் பற்றிய ஆராய்ச்சிகள், இந்து மத வழிபாடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் கொண்டு சமஸ்கிருத மொழி போற்றி பாதுகாக்கப்படுகிறது. இன்று உலக சமஸ்கிருத தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து செய்தியைப் பதிவிட்டுள்ளார். அதில், “உலக சமஸ்கிருத […]
சென்னை : தமிழக புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளது முதல், பிரதமர் மோடி ரக்ஷா பந்தனுக்கு வாழ்த்து தெரிவித்தது வரையில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த செய்திக் குறிப்பில் காணலாம். கலைஞர் 100 நாணயம் : மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயரில் 100 ரூபாய் நாணயத்தை நேற்று சென்னையில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். புதிய தலைமைச் செயலாளர் […]
டெல்லி : விவசாயிகளுக்கு அதிக பயன், மகசூல் தரக்கூடிய 109 பயிர் ரகங்களை இந்திய வேளாண் ஆராய்ச்சியாளர்கள் (Indian Agricultural Research Institute) கண்டறிந்து இருந்தனர். அதனை நேற்று பிரதமர் மோடி விவசாயிகளுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதன் மூலம்விவசாயிகளின் பயிர் உற்பத்தியை அதிகரிக்க செய்ய முடியும் எனவும் தெரிவித்தார். டெல்லியில் உள்ள வேளாண் ஆராய்ச்சி கழகத்தில் பிரதமர் மோடி 109 பயிர் ரகங்களை வெளியிட்டார். இதில், 34 பயிர் வகைகள் 27 தோட்டப்பயிர்கள் ஆகியவை அடங்கும். […]
வயநாடு : கடந்த ஜூலை மாதம் 30ஆம் தேதி அதிகாலையில் கேரளா மாநிலம் வயநாட்டில் மேப்பாடி, சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவங்கள் நாட்டையே உலுக்கின. இதுவரை இந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 400க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இன்னும் பலரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி வருகை : இன்னும் பல்வேறு பகுதிகளில் மீட்புப்படையினர் , இந்திய ராணுவம் என பலர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலச்சரிவு […]
குஜராத் : இன்று (ஆகஸ்ட் 10) உலகம் முழுக்க சிங்க தினம் (World Lion Day) கொண்டாடப்பட்டு வருகிறது. பூனை வகைகளில் மிக பெரிய மிருகமாக சிங்கங்கள் பார்க்கப்படுகிறது. சிங்கங்களில் குணங்களை அடிப்படையாக கொண்டு அதனை காடுகளின் அரசன் என அழைக்கப்படுகிறது. இந்த சிங்க தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் சிங்கங்களில் அழகான புகைப்படங்களை பதிவிட்டு சிங்க தினம் பற்றிய பல்வேறு தகவல்களை பதிவிட்டுள்ளார். அதில், உலக சிங்க தினத்தன்று, […]
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 22இல் தொடங்கப்பட்டது. ஜூலை 23ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றன. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதியன்று நிறைவடைவதாக முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் , குறிப்பிட்ட தேதிக்கு முன்னராகவே நேற்று (ஆகஸ்ட் 9) நாடாளுமன்ற கூட்டத்தொடர் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரண்டு […]
டெல்லி : இந்தியா சார்பாக சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வெல்லும் வீரர் , வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாகவும், நேரில் அழைத்தும் பாராட்டுவது வழக்கமான ஒன்று. அதே போல, தற்போது நடைபெறும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கான பதக்கத்தை உறுதி செய்த வினேஷ் போகத்திற்கு வாழ்த்து தெரிவிப்பாரா என்று கேள்விகளும் எழுந்துள்ளது. தற்போது பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை இந்திய வீரர் வீராங்கனைகள் 3 வெண்கல பதக்கங்கள் மட்டுமே வென்றுள்ளனர். […]
பெங்களூரு : அண்மையில் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் 2024-ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் பொதுவான அறிவிப்புகளையும் நிதி ஒதுக்கீடுகளையும் தாண்டி பீகார் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு கூடுதல் அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டன. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தன. கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளதாக குற்றம் சாட்டினார். இதனை அடுத்து, குறிப்பிட்ட மாநிலங்கள் மத்திய அரசிடம் தங்கள் மாநில கோரிக்கைகளை முன்னிறுத்தி […]
அனுஷ்மான் கெய்க்வாட் : இந்திய அணியின் முன்னாள் வீரரான அனுஷ்மான் கெய்க்வாட் 1974-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தொடரில் பேட்ஸ்மேனாக அறிமுகமானார். இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள் மட்டுமின்றி,15 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். கிட்ட தட்ட 10 ஆண்டுகள் இந்தியா அணிக்காக விளையாடினார். அதன்பின் 1997-1999 மற்றும் 2000 ஆண்டுகளில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் செயல்பட்டார். அனுஷ்மான், சமீபத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பெற்று வந்த போது […]
வயநாடு : கேரளாவில் உள்ள வயநாட்டில் பல இடங்களில் கனமழை பெய்து வருவதால் குறிப்பாக மலப்புரம், கன்னூர் போன்ற இடங்களில் மழை பெய்து வருகிறது. இதன் விளைவாக நேற்று 2 மணியளவில் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், 20 பேர் உயிரிழந்து உள்ளனர், மேலும் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகியுள்ளது. அதை தொடர்ந்து பலரும் இன்னுமும் நிலச்சரிவில் சிக்கி உள்ளதால் மீட்பு பணிகளையும் தீவிர படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி நிலச்சரிவில் […]
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் இன்று மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உரையாற்றி வருகிறார். அவர் பேசுகையில், நாடு முழுக்க அச்சம் நிறைந்த சூழல் நிலவுகிறது. அந்த அச்சம் நம் நாட்டின் அனைத்து பக்கமும் பரவியுள்ளது என குறிப்பிட்டார். மேலும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு நாட்டின் இளைஞர்களை பாதித்த மிகப்பெரிய பிரச்சினையாகும். ஆனால் அதுபற்றி நிதியமைச்சர் தனது உரையில் எதையும் குறிப்பிடவில்லை. சிறு வணிகங்களை […]
டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மம்தா பானர்ஜியை தவிர இந்தியா கூட்டணியின் மாநில முதல்வர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. இந்த கூட்டத்தில் மம்தா பேசுகையில், தனக்கு போதிய நேரம் வழங்கப்படவில்லை எனவும், தான் பேசும் போது மைக் அணைக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டி இருந்தார். மேலும், மம்தா பேனர்ஜி பேசுகையில் , பாஜக மற்றும் கூட்டணி கட்சி முதல்வர்களுக்கு 10 -20 நிமிடங்கள் பேச […]
மு.க.ஸ்டாலின்: இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்தியா கூட்டணியில் உள்ள திமுக , காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் மாநில முதல்வர்கள் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்தியா கூட்டணியில் இருந்து மம்தா பானர்ஜி மட்டும் நிதி ஆயோக் கூட்டத்தில் இன்று கலந்துகொண்டார். மத்திய பட்ஜெட்டில் மேற்கு வங்கம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என கூறி அதற்கு […]
டெல்லி: இன்று பிரதமர் மோடி தலைமையில் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் மற்றும் பாஜக ஆதரவு மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். மம்தா பேனர்ஜியை தவிர இந்தியா கூட்டணியில் உள்ள மாநில முதலமைச்சர்கள் பல்வேறு காரணங்களால் கலந்துகொள்ளவில்லை. மத்திய பட்ஜெட்டில் மேற்கு வங்க மாநிலம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தான் நிதி ஆயோக் ஆலோசனை கூட்டத்தில் […]
நிதி ஆயோக் : இன்று பிரதமர் தலைமையிலான நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநில முதலைமைச்சர்களும் கலந்துகொள்ள உள்ள அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை. இது குறித்து முதலமைச்சரின் விளக்க அறிக்கை மற்றும் வீடீயோ வெளியாகியுள்ளது. அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் 2024இல் தமிழகத்திற்கு என்று சிறப்பு திட்டம், நிதி ஒதுக்கீடு செய்யாததன் காரணமாகவே நிதி ஆயோக் கூட்டத்தில் தான் […]
சென்னை: மத்திய பட்ஜெட் 2024 தாக்கல் செய்யப்பட்டதற்கு பின்பு, மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் , பட்ஜெட்டில் ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரங்கள் பற்றி செய்தியாளர்களிடம் கூறினார். அப்போது தமிழகத்திற்கு 6,362 கோடி ரூபாய் ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் இல்லை. தமிழக (திமுக) அரசு நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் செய்கிறது என கூறி குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழக பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் […]
கார்கில் : 1999ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரில் இந்திய ராணுவ வீரர்கள் வெற்றி பெற்றதை குறிப்பிடும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 26ஆம் தேதி கார்கில் நினைவு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் 25ஆம் ஆண்டு கார்கில் நினைவு தின கொண்டாட்டம் காஷ்மீர் முதல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. கார்கில் நினைவு தினத்தை முன்னிட்டு காஷ்மீர், கார்கில் மாவட்டத்தில் டிராஸ் எனுமிடத்தில் நடைபெற்று வரும் ராணுவ நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். […]
மு.க.ஸ்டாலின் : இன்று மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ததை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு நேற்று முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரானது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2024 தாக்கல் செய்தார். தொடர்ந்து 7-வது முறையாக மத்திய நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் பல்வேறு […]