பயங்கரவாத தாக்குதல்., காயமடைந்தவர்களை நேரில் சந்தித்த அமித்ஷா!
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்து அனந்த்நாக் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை மத்திய அமைச்சர் அமிதிஷா நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் உள்ளூர் ஆதரவு அமைப்பான TRF பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் அனந்த்நாக் மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார். சிகிச்சை பெற்று வருவோர்களின் உடல் நிலை குறித்து அமித்ஷா கேட்டறிந்தார்.
நேற்று நடந்த இந்த பயங்கரவாத தாக்குதல் குறித்த செய்தி அறிந்ததும் நேற்றே மத்திய அமைச்சர் அமித்ஷா காஷ்மீர் புறப்பட்டு சென்றுவிட்டார். பிரதமர் மோடி சவூதி அரேபியா பயணத்தை முடித்துக்கொண்டு இன்று டெல்லி திரும்புகிறார். இன்று மாலை மத்திய பாதுகாப்புத்துறை சார்பில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.