பாகிஸ்தான் : பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக தெஹ்ரானில் ஈரான் அதிபருடனான சந்திப்பின்போது தெரிவித்திருக்கிறார். காஷ்மீர் விவகாரம், பயங்கரவாதம், சிந்து நதி நீர் பங்கீடு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து முக்கியப் பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புவதாகவும் அவர் பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” காஷ்மீர், பயங்கரவாதம், சிந்து நதி நீர் பங்கீடு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து சர்ச்சைகளையும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க […]
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் 9 இடங்களில் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலானது பயங்கரவாதிகள் இருப்பிடங்களை குறிவைத்து மட்டுமே நடத்தப்பட்டது என்றும், பாகிஸ்தான் மக்கள் மீதோ, ராணுவம் மீதோ இந்த தாக்குதல் நடத்தப்படவில்லை என இந்திய […]
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது. இந்த TRF அமைப்பு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் இ தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் ஆதரவு என்றும், இதனால் பாகிஸ்தானுக்கும் இதற்கும் தொடர்பு உள்ளது என்று இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதனால் வர்த்தகம், விசா, எல்லை பங்கீடு என இரு நாடு உறவுகளும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. பயங்கரவாத தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என கூறி […]
Shehbaz Sharif: பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்கவுள்ளார். பாகிஸ்தானில் கடந்த மாதம் 8-ம் தேதி பல்வேறு பரபரப்பு சம்பவங்களுக்கு மத்தியில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் ஆதரவு வேட்பாளர்கள் பல்வேறு இடங்களை கைப்பற்றிய போதும் முழு ஆதரவு கிடைக்கவில்லை. அதே போல் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் […]
நீண்ட இழுபறி, குழப்பங்களுக்கு பிறகு பாகிஸ்தானில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் (PML – N) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானதால் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப்பும், அதிபராக ஆசிப் அலி சர்தாரியும் பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுகிறது. பெரும் பதற்றம், அடுத்தடுத்த குண்டு வெடிப்பு மற்றும் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் கடந்த 8ம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. பின்னர் வாக்கு எண்ணிக்கையில் தொடர் இழுபறி நீடித்து வந்த […]
பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமையவுள்ள நிலையில், பிரதமர் வேட்பாளராக ஷெபாஸ் ஷெரீப்பை அவரது சகோதரர் நவாஸ் ஷெரீப் பரிந்துரை செய்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த வாரம் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி (சுயேட்சை), முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி, முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி இடையே கடும் […]