தமிழ்நாடு

செந்தில் பாலாஜி எப்போது ரிலீஸ்.? “இன்னும் உத்தரவு கிடைக்கவில்லை.,” சென்னை நீதிமன்றம் பதில்.! 

சென்னை : சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகியிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, இன்று உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ரூ.25 லட்சம் பிணை, அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்து உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிபந்தனை ஜாமீன் உத்தரவுக்கான நகல் முதலில் , செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரை விசாரிக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு அனுப்பப்டும். அதன் பிறகு அமலாக்கத்துறை நீதிமன்ற காவல் நிறுத்திவைக்கப்பட்டு திகார் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி […]

Madras Session Court 4 Min Read
Senthil Balaji

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்திக்கும் செந்தில் பாலாஜி.? அடுத்தடுத்த நகர்வுகள் என்ன.?

சென்னை : சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையினரால் கடந்த 2023 ஜூன் மாதம் கைதாகியிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு , உச்சநீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது. ரூ.25 லட்சத்திற்கு பிணை, ஆமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்து என பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. மேலும், செந்தில் பாலாஜி மீண்டும் தமிழ்நாடு அமைச்சராக நியமனம் செய்வபடுவதற்கு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை என்று அவரது வழக்கறிஞர் இளங்கோ செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். இதனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய அமைச்சரவை மாற்றம் விரைவில் அறிவிக்கப்படும் […]

#Delhi 5 Min Read
Senthil Balaji - Tamilnadu CM MK Stalin

“வருக வருக என வரவேற்கிறேன்”! செந்தில் பாலாஜிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை : அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சுமார் 471 நாட்கள் விசாரணையில் இருந்து வந்த செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் இன்று காலை நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை தொடர்ந்து இன்று மாலை அல்லது நாளை காலை செந்தில் பாலாஜி வெளியில் வரவுள்ளார். இதனைத் தொடர்ந்து, 15 மாதங்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வரும் செந்தில் பாலாஜிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “ஆருயிர் சகோதரர் […]

mk stalin 4 Min Read
MK Stalin

மீண்டும் அமைச்சராகிறார் செந்தில் பாலாஜி.? வழக்கறிஞர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : 2011 – 2016 காலகட்டத்தில் அதிமுக அமைச்சரவையில் இருந்த செந்தில் பாலாஜி , போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கியதாக அவர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் புகார் பதிவு செய்தனர். இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி கடந்த 2023 ஜூன் மாதம், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். பல மாதங்களாக அமலாக்கத்துறை விசாரணையில் இருந்த செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு முதன்மை […]

#Delhi 8 Min Read
Former TN Minister Senthil balaji

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.! 

டெல்லி : சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த 2023 ஜூனில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஓராண்டுக்கு மேலாக அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் இருக்கும் செந்தில் பாலாஜி, ஜாமீன் கேட்டு சிறப்பு நீதிமன்றம், உயர்நீதிமன்றங்களை நாடினார். அங்கு வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன இதனை அடுத்து, உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி தரப்பு மனு அளித்து இருந்தது. இந்த ஜாமீன் வழக்கானது, நீதிபதிகள் அபெய் எஸ்.ஓகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிக் […]

#Delhi 3 Min Read
Senthil Balaji - Supreme court of India

அக்-27ல் சம்பவம் உறுதி.. மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி.! . நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை!

சென்னை : விஜய்-யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி மாநாட்டை அக்.27 ஆம் தேதி நடத்த காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது. தவெக முதல் மாநில மாநாடு  விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் நடைபெறுகிறது. ஏற்கெனவே வழங்கப்பட்ட 33 நிபந்தனைகளை மீண்டும் சுட்டிக்காட்டி காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. மேலும், அவற்றில் 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என விக்கிரவாண்டி காவல் துணை கண்காணிப்பாளர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, தவெக கட்சியின் மாநாடு குறித்த ஆலோசனைக் […]

Tamilaga Vettri Kazhagam 4 Min Read
TVK Maanadu

முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதான ‘போன்சாய்’ விமர்சனம்.! சவுக்கு சங்கர் கூறியதன் அர்த்தம் என்ன.?

சென்னை : பெண்காவலர்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் யூ-டியூபில் கருத்து தெரிவித்ததற்காக யூ-டியூபர் சவுக்கு சங்கர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன. அவர் மீது கஞ்சா வைத்திருந்த வழக்கும் பதியப்பட்டது.  இந்த வழக்குகளை அடுத்து சென்னை காவல் ஆணையர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தை பதிவுசெய்தார். இந்த குண்டர் சட்டமானது முதலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீக்கம் செய்யப்பட்டது. இதனை அடுத்து, சவுக்கு சங்கர் மீது தேனி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட போதைப்பொருள் வழக்கின் கீழ் மீண்டும் […]

#Delhi 8 Min Read
Savukku Shankar - Tamilnadu CM MK Stalin

தமிழகத்தில் (27.09.2024) வெள்ளிக்கிழமை இந்த இடங்களில் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 27.09.2024) அதாவது , வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.எனவே, எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில், மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..   கோவை  தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி சாலை (கண்ணன் […]

#Chennai 6 Min Read
27.09.2024 Power Cut Details

திருப்பதி பிரம்மோற்சவம்: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்! எங்கெல்லாம் தெரியுமா?

சென்னை : திருப்பதி திருமலையில் நடைபெறும் பிரம்மோத்ஸவம் திருவிழாவை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்து இயக்கப்படும் என  போக்குவரத்துக் கழகம் மேலாண் இயக்குநர் த. நா.லிமிடெட், அறிவித்துள்ளார். இந்த வருடம் 2024-ல் திருப்பதி திருமலையில் “பிரம்மோத்ஸவம்” திருவிழா அக்டோபர் 4 முதல் 12 வரை நடைபெற உள்ளது. இத்திருவிழாவினை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளது. அதன்படி, சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், […]

#Transport Department 3 Min Read
Special bus

தமிழகத்தில் (26.09.2024) வியாழக்கிழமை இந்த இடங்களில் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 26.09.2024) அதாவது , வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.எனவே, எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில், மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.. கோவை  கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி, நாய்கன்பாளையம், பள்ளபாளையம் அரிசிபாளையம், எம்.எம்.பட்டி, […]

#Chennai 12 Min Read
(25.09.2024) Thursday, power cut

திமுக-விசிக கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை.! திருமாவளவன் ‘பளீச்’ பதில்.!

சென்னை : வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ‘மது ஒழிப்பு மாநாடு’ நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு அக்கட்சி தலைவர் திருமாவளவன், ‘அதிமுகவும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளலாம்.’ என்று கூறியதிலிருந்து  ‘திமுக-விசிக’ கூட்டணி பற்றிய பேசுபொருட்கள் இன்னும் ஓய்ந்தபடில்லை. முதலில், அதிமுக அழைப்பு சர்ச்சை, அடுத்ததாக விசிக தலைவர் திருமாவளவன் ‘ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு’ என்று பேசிய வீடியோ பதிவிட்டு சர்ச்சை, மதுரையில் விசிக கொடிகம்பம் […]

5 Min Read
VCK Leader Thirumavalavan - Tamilnadu CM MK Stalin (2)

த.வெ.க மாநாட்டிற்கு அனுமதி மறுப்பா.? விளக்கம் கொடுத்த விழுப்புரம் எஸ்.பி.!

சென்னை : நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சி முதல் மாநாடு வரும் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டம்  விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை த.வெ.க நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக செப்டம்பர் மாதம் மாநாடு என செய்திகள் வெளியான நிலையில், மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தாமதமாவே, இறுதியாக அக்டோபர் 27ஆம் தேதி மாநாடு நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மாநாட்டில் கலந்துகொள்ள மாநிலம் முழுவதும் […]

Tvk 3 Min Read
TVK Leader Vijay - Vilupuram SP Deepak

மாணவர்களுக்கு ‘ஹேப்பி நியூஸ்’.! அக். 6ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை.! 

சென்னை :  தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெரும் பள்ளிகள் , தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் இந்த வாரம் காலாண்டு தேர்வு முடிவடைய உள்ளது. வழக்கமாக காலாண்டு தேர்வு விடுமுறை என்பது அக்டோபர் 2வரையில் மட்டுமே இருக்கும். அதேபோல இந்தாண்டும் அக்டோபர் 2 வரையில் மட்டுமே காலாண்டு விடுமுறை அறிவிக்கப்ட்டிருந்தது. வழக்கமாக இல்லாமல் இந்தாண்டு குறுகிய நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் விடுமுறை நீட்டிக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்தது. அதற்கு ” […]

#Pallikalvithurai 3 Min Read
TN Schools

த.வெ.க முதல் மாநாட்டிற்கு அனுமதி கிடைக்குமா.? வந்தது புதிய சிக்கல்.!

சென்னை : நடிகர் விஜய் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியின் முதல் மாநாடு, வரும் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி நடைபெரும் என அறிவிக்கப்பட்டுவிட்டது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இந்த மாநாடு பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கு முன்னர் இம்மாத தொடக்கத்தில் இந்த மாநாடு நடைபெறும் என கூறப்பட்டு வந்தது. அதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில். மாநாட்டிற்கான பணிகள் முழுதாக நிறைவடையாத காரணத்தால் அந்த தேதிகள் கைவிடப்பட்டு பின்னர் […]

Tvk 6 Min Read
TVK Leader Vijay

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள்! ஊக்கத்தொகை வழங்கிய தமிழக அரசு!

சென்னை : இந்த ஆண்டில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் தொடரில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கியிருக்கிறார். பாராலிம்பிக்கில் தொடரில் கலந்து கொண்டு வெள்ளி மட்டும் வெண்கல பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு, துளசிமதி, மணிஷா, நித்யஸ்ரீ உள்ளிட்டோருக்கு ரூ.5 கோடி ஊக்கத்தொகை வழங்கினார். இதுவரை இல்லாத அளவிற்கு பாராலிம்பிக் தொடரில் இந்த ஆண்டு இந்திய அணி 29 பதக்கங்களைக் கைப்பற்றி சாதனைப் படைத்திருந்தது. அதில், 7 தங்கப்பதக்கமும், 9 வெள்ளிப்பதக்கமும் மற்றும்  13 […]

#Mariyappan thangavelu 3 Min Read
MK stalin - Paralympic

‘லட்டு’வில் சிக்கிய கோபி – சுதாகர்.! பகிரங்க மன்னிப்பு கேட்ட பரிதாபங்கள்.!

சென்னை : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். இதனையடுத்து, உணவுப்பொருள் ஆய்வுக்குழு ஆய்வு செய்ததில் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், பன்றிக் கொழுப்பு, மாட்டிறைச்சி கொழுப்பு ஆகியவை கலந்திருந்ததை உறுதிப்படுத்தியது. இந்த விவகாரம் பெரிதாகச் சர்ச்சையாக வெடித்த நிலையில், சினிமா பிரபலங்கள் சிலர் நகைச்சுவையாகப் பேசுவது போல் பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள். குறிப்பாக, மெய்யழகன் படத்தின் […]

#Chennai 7 Min Read
parithabangal laddu

சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த ‘அந்த’ 6 பேர்.! திருப்பூரில் அதிரடி கைது.!

திருப்பூர் : வங்கதேச நாட்டைச் சேர்ந்த தன்வீர், ராஜீப்தவுன், எம்.டி.அஸ்லாம், எம்.டி.அல் அஸ்லாம், எம்.டி.ரூகு அமீன் மற்றும் சோமூன்சேக் ஆகிய 6 இளைஞர்கள் வேலை தேடி இந்தியா வந்துள்ளனர். மேலும், இவர்கள் 6 பேரும் கவுகாத்தி வழியாக திருப்பூருக்கும் வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து 6 இளைஞர்களும், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி கூலிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பின்னலாடை நிறுவனத்த்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில்,நேற்று அந்த இளைஞர்கள் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர். அங்கு […]

#Bangladesh 4 Min Read
Tirupur Arrest

தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின் ஆய்வு முடிவில்,  லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாட்டிறைச்சி கொழுப்பு , பன்றி இறைச்சி கொழுப்பு ஆகியவை கலந்ததாக கூறப்பட்டது. கோயில் பிரசாத லட்டுகளில் விலங்குகளின் மாமிச கொழுப்புகள் கலந்ததாக எழுந்த குற்றசாட்டுகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உண்டாகியுள்ளன. இந்த விவகாரம் குறித்து தமிழ் திரைப்பட இயக்குனர் மோகன்.ஜி  அண்மையில் ஒரு […]

#Chennai 4 Min Read
Director Mohan G speak about Pazhani Panjamirtham

லட்டு விவகாரம்., பவன் கல்யாணிடம் மன்னிப்புக் கேட்ட ‘மெய்யழகன்’ கார்த்தி.!

சென்னை : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்து, ’96’ பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் இந்த வாரம் ரிலீசாக உள்ள திரைப்படம் மெய்யழகன். இந்த படத்தின் புரொமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த திரைப்படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு ‘சத்யம் சுந்தரம்’ எனும் பெயரில் ரிலீசாக உள்ளது. தெலுங்கில் ரிலீசாக உள்ளதால், ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற புரொமோஷன் நிகழ்வில்  நடிகர் கார்த்தி ,  இயக்குனர் பிரேம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அங்குள்ள தொகுப்பாளர், […]

#Chennai 6 Min Read
Andhra Pradesh Deputy CM Pawan Kalyan - Meiyazhagan movie still Karthi

மக்களே! தமிழகத்தில் (25.09.2024) புதன்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 25.09.2024) அதாவது , புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.எனவே, எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில், மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..   கோவை கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் குனியமுத்தூர், சுந்தராபுரம் பகுதி, கோவைப்புதூர், புட்டுவிக்கி பி.ஜி.பாளையம், குமாரபாளையம், மலபாளையம், வடவேடம்பட்டி, வதம்பச்சேரி, […]

#Chennai 11 Min Read
25.09.2024 Power Cut Details