சென்னை :திருப்பதி திருமலையில் நடைபெறும் பிரம்மோத்ஸவம் திருவிழாவை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்து இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் மேலாண் இயக்குநர் த. நா.லிமிடெட், அறிவித்துள்ளார்.
இந்த வருடம் 2024-ல் திருப்பதி திருமலையில் “பிரம்மோத்ஸவம்” திருவிழா அக்டோபர் 4 முதல் 12 வரை நடைபெற உள்ளது. இத்திருவிழாவினை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளது.
அதன்படி, சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி. கும்பகோணம், தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து திருப்பதிக்கு வருகின்ற 30ம் தேதி முதல் அக்டொபர் 13ம் தேதி வரை இயக்கப்படுகிறது.
மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளுக்கு முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையை பக்தர்கள் முழுமையாக பயன்படுத்தி பயணம் மேற்கொள்ளwww.tnstc.inமற்றும்tnstc official appமூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
unknown node